நிச்சயத்தோட நின்ன பிரதீப் ஆண்டனி திருமணம்! இங்கேயும் இப்படி ஒரு ரூல்ஸ் போடலாமா?
Pradeep Antony: பிக் பாஸ் சீசன் 7 ல் ஒரு கடும் போட்டியாளராக இருந்தவர் பிரதீப் ஆண்டனி. தான் வைத்தது தான் சட்டம். தான் சொல்வதுதான் ரூல்ஸ் என்ற வகையில் அவருடைய தனி பாணியில் பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்து கொண்டிருந்தவர். நாள்தோறும் ஏகப்பட்ட சண்டை, சச்சரவு, பிரச்சனைகள் என வீடே ரணகளமாக இருந்தது.
மக்களுக்கு இதுதான் தேவை. இதை பார்த்து மக்களும் ரசித்து வந்தார்கள். இதனாலையே பிரதீப் ஆண்டனிக்கு ரசிகர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது .மற்றவர்களுக்காக எந்த வகையிலும் காம்ப்ரமைஸ் ஆகாத ஒரு நபர் பிரதீப் ஆண்டனி. இதுதான் மக்கள் மத்தியில் அவர் தனியாக தெரிந்ததற்கு ஒரு காரணம். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த பெண் போட்டியாளர்களால் இவர் மீது ஒரு தவறான குற்றச்சாட்டு வைத்து வீட்டை விட்டு விரட்டடிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: 1987ல் கடும் போட்டி… விஜயகாந்த், கமல், ரஜினி யாருக்கு வெற்றி?
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போனாலும் பிரதீப் ஆண்டனிக்கு மக்கள் மத்தியில் அதிக அளவு வரவேற்பு இருந்து கொண்டே போனது. அது இன்றுவரை இருந்து வருகிறது. அவருக்கு என சோசியல் மீடியாவில் தனியாக ஆர்மி ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் அவருக்கு சப்போர்ட் செய்து வந்தார்கள். பிக் பாஸ் சீசன் ஒன்றில் ஓவியாவுக்கு எப்படிப்பட்ட ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்ததோ அதே மாதிரியாக பிக் பாஸ் சீசன் 7ல் பிரதீப் ஆண்டனிக்கு கூட்டம் அதிகமாகியது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்த பிரதீப் ஆண்டனி தனக்கான வாய்ப்புக்காக தேடி அலைந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய நீண்ட நாள் தோழியை திருமணம் செய்வதாக கூறி நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார் பிரதீப் ஆண்டனி. நிச்சயம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாத காலம் ஆகியும் இன்னும் திருமணம் செய்தி பற்றி அறிவிப்பு வரவில்லை.
இதையும் படிங்க: கமலின் மருதநாயகம் கனவு நிறைவேறுகிறதா? புதிய தொழில்நுட்பம் கைகொடுக்குமா?
அதற்கு என்ன காரணம் என விசாரித்த போது வாழ்க்கையில் காசு, பணம் எல்லாம் சம்பாதித்து செட்டில் ஆன பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் பிரதீப் ஆண்டனி. இது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என தெரியவில்லை. ஆனால் அவருடைய குறிக்கோளை அடையும் வரை பிரதீப் ஆண்டனியின் தோழியும் காத்துக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது.