Connect with us

Biggboss Tamil 7

பிக் பாஸ் வீட்டு பாத்ரூம்ல தாப்பாவே இல்லையா!.. என்ன கமல் சார்.. பிரதீப் ஆண்டனி சொல்றது நிஜமா?..

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட நிலையில், அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பிக் பாஸ் வீட்டின் பாத்ரூமில் தாழ்பாள் போடாமல் பிரதீப் ஆண்டனி பாத்ரூம் போனார் என குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டு பாத்ரூமில் தாப்பாவே இல்லை என பிரதீப் ஆண்டனி புதிய ட்வீட்டை போட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பணப்பெட்டியுடன் பூர்ணிமா ரவி வெளியேறியதில் இருந்து மீண்டும் ஆக்டிவாக ட்வீட்களை போட்டு வருகிறார் பிரதீப் ஆண்டனி.

இதையும் படிங்க:  என்ன ஏலியன் இப்படி கோபப்படுது!.. மாஸ் காட்டும் அயலான் டிரெய்லர்.. பொங்கலுக்கு வசூல் வேட்டை தான்!

பூர்ணிமா, மாயா, ஜோவிகா, ஐஷு உள்ளிட்ட பெண் போட்டியாளர்கள் தான் பிரதீப் ஆண்டனி மீது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற பயங்கரமான குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

கமல்ஹாசனும் பெண்கள் பாதுகாப்பு தான் நாட்டிலும் வீட்டிலும் முக்கியம் என டயலாக் எல்லாம் பேசி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். அப்போதெல்லாம் பிக் பாஸ் வீட்டில் தாப்பாவே இல்லை என சொல்லாமல் மெளனமாக இருந்து வந்த பிரதீப் ஆண்டனி தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில், ”முதலில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வர போட்டியாளர்கள் கிட்ட பிக் பாஸ் வீட்டு பாத்ரூமில் தாழ்பாள் இருக்கான்னு கேட்டுட்டு அப்புறம் என்ன வந்து கலாய்ங்க, என் குடும்பத்தை இழுங்க, என் மெண்டல் ஹெல்த் பத்தி பேசுங்க, சும்மா ஒண்ணும் தெரியாமல் பேசக் கூடாது” என பொங்கியுள்ளார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் சமாதியில் மண்டிப்போட்டு வணங்கிய ஜெயம் ரவி.. கண்ணெல்லாம் கலங்கிடுச்சு.. அடுத்து யாரு?

பிக் பாஸ் வீட்டு பாத்ரூமில் தாழ்பாள் உண்மையாகவே இல்லையா? என ரசிகர்கள் கமல் சாரை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.  போட்டியாளர்களுக்கு சம்பளம், 50 லட்சம் பரிசுத் தொகை எல்லாம் கொடுக்கிறீங்க ஒரு பாத்ரூம் தாழ்பாள் வாங்கிப் போட காசு இல்லையா என்றும் கலாய்த்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top