latest news

3 படம் தொடர் ஹிட்!.. பிரதீப் ரங்கநாதன் கேட்கும் சம்பளம்!. மிரளும் கோலிவுட்!…

ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படம் சூப்பர் ஹிட். அதன்பின் 3 வருடங்கள் கழித்து அவர் இயக்கி நடித்த திரைப்படம்தான் லவ் டுடே. இந்த கால இளசுகள் செல்போனை எப்படி பயன்படுத்துகிறார்கள்?. அந்த செல்போன் காதலுக்கு எவ்வளவு பிரச்சனைகளை கொண்டு வருகிறது என்பது ஜாலியாக காட்டியிருந்தார். எனவே, இந்த படமும் ஹிட் அடித்தது.

லவ் டுடே படத்தின் வெற்றியால் பிரதீப் ரங்கநாதன் கவனிக்கப்படும் ஒரு நடிகராக மாறினார். அந்த படத்திற்கு பின் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIK ஆகிய படங்களில் நடித்தார் பிரதீப் பரங்கநாதன். அதில் டிராகன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.. லவ் டுடே படத்தை போலவே இந்த படமும் 100 கோடி வசூலை பெற்றது. அதன்பின் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அமிதாப் பைஜுவுடன் இணைந்து பிரதீப் நடித்து வெளியான டூயட் திரைப்படமும் 100 கோடி வசூலை பெற்றது..

ஒருபக்கம், LIK திரைப்படம் 50 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படம் இப்போது வரை வெளியாகவில்லை. பலமுறை ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதனால், படத்தை தயாரித்த லலித்குமாருக்கு பல கோடிகள் நஷ்டம் என்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனை சந்தித்த லலித்குமார் ‘எல்.ஐ.கே படத்தால் எனக்கு இவ்வளவு கோடி நஷ்டம்.. எனக்கு இன்னொரு படத்தில் நீங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும்’ என கேட்டிருக்கிறார்..

அதற்கு சம்மதம் சொன்ன பிரதீப் ரங்கநாதன் சம்பளமாக 50 கோடி கேட்டாராம்.. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லலித்குமார் ‘யோசித்து சொல்கிறேன்’ என சொல்லிவிட்டாராம்.. அவரிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் பிரதீப் கேட்ட 50 கோடி சம்பளத்திற்கு சம்மதித்து அவருக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்கிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். ஏனெனில், ட்யூட் படத்தை 26 கோடி பட்ஜெட்டில் எடுத்த அந்த நிறுவனத்திற்கு லாபம் மட்டுமே 80 கோடி கிடைத்தது என்கிறார்கள்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

6 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

7 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

9 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

21 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

22 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago