எந்த அறிமுக நடிகரும் செய்யாத சாதனை!..வசூலில் அசால்ட் செய்த ‘லவ் டுடே’ பிரதீப்...
குறும்படங்களை இயக்கி வந்த பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனரானார். முதல் திரைப்படமே மாஸ் ஹிட். ஜெயம் ரவியின் கேரியரில் அவர் நடித்த எந்த திரைப்படமும் அத்தனை கோடி வசூல் செய்தது இல்லை.
அப்படத்திற்கு பின் 3 வருடங்கள் அடுத்த படம் இயக்கும் முயற்சியில் இருந்தார் பிரதீப். ஹீரோ கிடைக்காததால் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார். அப்படி உருவான திரைப்படம்தான் லவ் டுடே.
இன்றைய நவீன செல்போன் காலத்தில் வயசு பையன்களின் காதலை சுவாரஸ்யமாக சொன்னதில் மீண்டும் ஹிட் அடித்துள்ளார் பிரதீப்.
இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வரவே இளசுகள் கூட்டம் தியேட்டரை நோக்கி படையெடுத்தது. படம் வெளியாகி இரண்டு வாரத்தை நெருங்கியுள்ள நிலையில் இப்படம் இதுவரை ரூ.46 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வார இறுதியில் இப்படம் ரூ.50 கோடி வசூலை தாண்டிவிடும் என கருதப்படுகிறது. எந்த அறிமுக நடிகரின் திரைப்படமும் தமிழகத்தில் இவ்வளவு வரவேற்பையும், வசூலையும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.