நான்தான் ஹீரோ: விக்ரமை படத்தை நிராகரித்த ஜெயம் ரவி பட இயக்குனர்..

by adminram |   ( Updated:2021-10-02 09:03:13  )
jeyam ravi
X

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நகைச்சுவை கலந்த பேமிலி எண்டர்டெயின்மென்ட் படமாக கோமாளி படம் வெளியானது. ரசிகர்களும் இப்படத்தை கொண்டாடி தீர்த்தார்கள்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். முதல் படத்திலேயே தன்னை இயக்குனராக நிரூபித்த பிரதீப் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பட்டியலில் இணைந்தார். கோமாளி படத்தில் 90ஸ் கிட்ஸ்களின் விளையாட்டுகளும் இடம் பெற்றிருந்ததால் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப்பின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவானது. அவரது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பிரதீப்பின் அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிப்பதாகவும், ஐசாரி கணேஷ் அப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

pradeep ranganathant

ஆனால் இந்த தகவல் உறுதியாகவில்லை. இந்நிலையில் தற்போது வெளியான தகவலின்படி, பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாகவும், இப்படத்தை பிரதீப் இயக்குவது மட்டுமல்லாமல், அவரே ஹீரோவாகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதீப் கோமாளி படத்திற்கு முன்பே பல குறும்படங்களை இயக்கி அதில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது முதல் படமான கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் இரண்டாவது படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாவது படத்தில் முன்னணி ஹீரோவை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரே நடிப்பது சர்ப்ரைஸாக உள்ளது.

Next Story