ப்ரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் படத்தின் கதை தானா..? இது அது இல்ல..! கலாய்க்கும் ரசிகர்கள்..!

Vignesh Shivan - Pradeep: ப்ரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்க இருக்கும் படத்தின் கதை குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. ஆனால் இந்த கதையில் முதலில் நடிக்க இருந்தது சிவகார்த்திகேயன் தானாம்.
ப்ரதீப் ரங்கநாதன் ஷார்ட் பிலிம் இயக்குனராக எண்ட்ரியானவர். இவரின் முதல் படமான கோமாளி மிகப்பெரிய ரீச்சை பெற்றது. இதில் ஜெயம் ரவி நடிக்க வேல்ஸ் பிலிம்ஸ் இப்படத்தினை தயாரித்தது. இப்போதைய டெக்னாலஜியை அப்போவே கலாய்த்து இருந்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆரை கிண்டலடித்த சந்திரபாபு.. அந்த ஆணவத்துக்கு புரட்சி தலைவர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?…
பலரும் ப்ரதீப்பையும் பாராட்டி இருந்தனர். இதை தொடர்ந்து ப்ரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே. படத்தின் டைட்டிலே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அவரின் ஷார்ட்பிலிமை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம். ஒரே படத்தால் ப்ரதீப்பின் கேரியர் பீக் எடுத்தது. படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.
இயக்குனராக இருந்தாலும் ப்ரதீப்பை நடிகராக ரசிகர்கள் நிறைய லைக்ஸ் தட்டினர். இப்படத்தினை தொடர்ந்து இயக்குனராக இருந்த ப்ரதீப்பை நடிகராக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இதை தொடர்ந்து இயக்கத்துக்கு கொஞ்சம் ப்ரேக் கொடுத்த ப்ரதீப் தற்போது விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: சிவாஜியையே ஓவர்டேக் செய்த அசத்தலான நடிப்பு!.. அந்த படத்திலிருந்து டேக் ஆப் ஆன சந்திரபாபு!..
இப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்திற்கு எல்.ஐ.சி எனப் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எனக் கூறப்படும் இந்த படம் சயின்ஸ் பிக்ஷன் கதையில் காதல் படமாக உருவாக்கப்பட இருக்கிறதாம்.
ஒரு ஆண் மொபைல் கேட்ஜெட் மூலம் காதலுக்காக 2030க்கு பயணம் செய்வது தான் கதை. இந்த கதை முதலுக்கு சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தாராம். ஆனால் விஎஃப்எக்ஸ்ஸால் பட்ஜெட் அதிகமாகும் என்பதால் அவர் விலகியதாக கூறப்படுகிறது. இந்த கதை சமீபத்தில் வெளியான அடியே படத்தினை ஒத்து இருப்பதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.