குறும்படங்கள் இயக்கி வந்த பிரதீப் ரங்கநாதன் கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக மாறினார். ‘அட சின்ன பையன் மாதிரி இருக்காரே. இவரா இயக்குனர்?’ என பலரும் ஆச்சர்யப்பட்டனர். ஆனால், அவரின் படைப்பை பார்த்து ஆச்சர்யப்பட வைத்தார். ஜெயம்ரவியை சிறப்பாக நடிக்க வைத்து, ரசிகர்களை கவரும்படி திரைக்கதை அமைத்திருந்தார்.
இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் அவர் ஹீரோவாக நடிப்பது என முடிவெடுத்தார். ‘வளரும் இயக்குனராக இருக்கும் நேரத்தில் பெரிய ஹீரோவை வைத்து படமெடுப்பதை விட்டுவிட்டு எதற்கு இந்த விபரீத ஆசை?’ என திரைத்துறையில் பலரும் நினைத்தனர். ஆனால் ‘லவ் டுடே’ படத்தை கொடுத்து மீண்டும் ஆச்சர்யப்படுத்தியிருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் 80 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
இதையும் படிங்க: விஜயகாந்த் பத்தி பொய் நியூஸ் சொல்லியே கொன்னுட்டீங்களேடா!.. மன அழுத்தத்தால் இறந்த ரசிகர்…
விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தும் கூட ‘இனிமேல் நான் இயக்கும் படத்தில் நான் மட்டுமே ஹீரோவாக நடிப்பேன்’ என அவர் சொல்லிவிட்டதாக செய்திகள் கசிந்தது. இப்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

இந்த பட வேலைகள் இப்போது துவங்கியுள்ளது. இந்நிலையில், முகம் அழகாக மாற வேண்டும் என்பதற்காவும், நிறம் மாற வேண்டும் என்பதற்காகவும் சில சிகிச்சைகளை பிரதீப் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த சிகிச்சையை திரையுலகில் பலரும் இப்போது செய்ய துவங்கிவிட்டனர்.
ஆனால், பிரதீப்புக்கு அது செட் ஆகாமல் முகம் வெள்ளையாக மாறி வெளுத்து போய்விட்டதாம். அவரை பார்க்கிற எல்லோரும் ‘என்ன பிரதர்.. வெள்ளைக்காரன் மாதிரி இருக்கீங்க?’ என கேட்க துவங்கிவிட்டார்களாம். இதோ தோற்றத்துடன் விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பாரா? இல்லை..மீண்டும் எதாவது சிகிச்சை செய்வாரா என்பது தெரியவில்லை.
இதையும் படிங்க: நீ பெரிய ஒழுங்கா?!.. காசுக்காக என்னவேணா பேசுவியா?!.. பயில்வானிடம் எகிறிய பப்லு!…
