“கோமாளி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், “லவ் டூடே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனராக பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் வெளியான இத்திரைப்படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 70 கோடிகளையும் தாண்டி வசூல் செய்து வருகிறது. அந்த அளவுக்கு 2022 ஆம் ஆண்டின் மாபெறும் வெற்றித் திரைப்படமாக ‘லவ் டூடே” அமைந்துள்ளது.
“லவ் டூடே” திரைப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது. மேலும் “லவ் டூடே” திரைப்படத்தை போலவே அந்த புதிய திரைப்படத்திலும் பிரதீப் ரங்கநாதனே நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் கிருஸ்துமஸ் விருந்துக்காக சுந்தர் சி லண்டன் சென்றிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளிவந்தது. அந்த விருந்தில் “சங்கமித்ரா” திரைப்படத்தை மீண்டும் தொடங்குவதற்காக சுந்தர்.சி, லைகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கண்ணதாசனை குடிகாரன் என்று திட்டியதால் உருவான கிளாசிக் பாடல்… இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா??
இதனை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதனும் லண்டன் சென்றிருப்பதாக ஒரு தகவல் வந்தது. இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஸ்கரனிடம் ரஜினிகாந்த்திற்காக ஒரு புதிய கதையை கூற உள்ளாராம் பிரதீப். ஒரு வேளை சுபாஸ்கரனுக்கு அக்கதை பிடித்துவிட்டால் இந்த கதையை ரஜினியிடம் எடுத்துச்செல்லலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
ரஜினிகாந்த் தற்போது “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து “டான்” திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தியுடன் ரஜினி கைக்கோர்க்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிபி சக்ரவர்த்தி கூறிய கதை ரஜினியை ஈர்க்கவில்லையாம். ஆதலால் சிபி சக்ரவர்த்திக்கு எந்த முடிவையும் சொல்லாமல் இருக்கிறாராம் ரஜினிகாந்த்.
மேலும் “வாரிசு” படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ ரஜினிகாந்த்தின் கால்ஷீட்டை பெற முயன்றுகொண்டிருக்கிறாராம். ஆதலால் விரைவில் லைகா நிறுவனம் ரஜினியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறதாம். இதனால்தான் பிரதீப் ரங்கநாதனை லைகா நிறுவனம் தன்னுடைய கிருஸ்துமஸ் விருந்திற்கு அழைத்துள்ளதாம்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…