கடந்த வருடம் 285 படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் வெற்றி தோல்வி என்பதையும் தாண்டி பத்து சதவீதத்திற்கும் குறைவாகத்தான் வெற்றி படங்கள் இருக்கின்றன. இதெல்லாம் தாண்டி வியாபார ரீதியாக எந்த மாதிரியான நெருக்கடியை இந்த படங்கள் எல்லாம் சந்தித்து இருக்கின்றன என்பதை பார்க்கும் பொழுது கவலைக்குரிய விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த 285 படங்களில் 47 படங்களை மட்டும் தான் ஓடிடி நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றன. மீதமுள்ள 200க்கும் மேற்பட்ட படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்கவே இல்லை.
என்ன ஆகும் அந்த தயாரிப்பாளர்களின் நிலைமை? இன்றைய சினிமாவை பொருத்தவரைக்கும் 40 லிருந்து 60% ஓடிடி வியாபாரம் தான். அதை நம்பி தான் படங்களையே எடுக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக சாட்டிலைட். சாட்டிலைட்டை பொறுத்தவரைக்கும் இன்னும் மோசம். 45 படங்களை மட்டும் தான் சாட்டிலைட் வாங்கி இருக்கிறார்கள். மீதமுள்ள 240 படங்களை சாட்டிலைட் நிறுவனங்கள் வாங்கவே இல்லை. நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு 120 படங்கள் வெளியானால் அதில் 90களில் இருந்து 100 படங்களை சாட்டிலைட் நிறுவனங்கள் வாங்கியிருப்பார்கள்.
ஆனால் இப்போது தலைகீழாக சரிந்து விட்டது சினிமாவின் வியாபாரம். இதில் ஏதாவது மாறுதல் வந்தால் ஒழிய சினிமாவை காப்பாற்ற முடியும். இன்னொரு பக்கம் ஆந்திரா தெலுங்கானா வசூல் விவரங்களை பற்றி நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் புத்தகமாக வெளியிட்டு இருந்தார்கள். அதை பார்க்கும் பொழுது தான் பிரதீப் ரங்கநாதன் என்ற ஒரு கலைஞனின் வளர்ச்சி எந்த அளவு இருக்கிறது என்பதை கவனிக்க முடிந்தது. ஆந்திரா தெலுங்கானா இரண்டிலும் மிக அதிகமாக வசூல் செய்த தமிழ் படம் என்றால் கூலி திரைப்படம் தான். 68 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலை அந்த படம் செய்திருக்கிறது.
இரண்டாவது இடத்தில் இருக்கிற நடிகர் யார் என்றால் பிரதீப் ரங்கநாதன். மூன்றாவது இடத்திலேயும் அவர்தான் இருக்கிறார். அவருடைய இரண்டு படங்களுமே ரஜினியின் பட கலெக்ஷனில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு வசூலை செய்திருக்கிறது. ரஜினிகாந்தின் படம் 60 கோடி என்றால் பிரதீப் படம் 25 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. மற்ற முக்கியமான நட்சத்திரங்களின் படங்கள் பிரதீப் ரங்கநாதன் படத்தில் மூன்றில் ஒரு பங்கு வசூலை செய்திருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் எப்பேர்ப்பட்ட நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என அனைவருக்கும் தெரியும்.

ரஜினியை தவிர இன்னும் நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அந்த நட்சத்திரங்களை எல்லாம் டபுள் ப்ரோமோஷனில் அடித்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அந்த அளவுக்கு வசூலில் முன்னணியில் இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கமல் அஜித் இவர்களெல்லாம் பிரதீப் ரங்கநாதன் படத்தின் வசூலில் 10% தான் ஆந்திரா தெலுங்கானாவில் இருக்கிறார்கள். அந்த நட்சத்திரங்கள் படங்களின் வசூல் சரிந்து இருக்கிறது என்பது ஒரு பக்கம் நமக்கு வருத்தத்தை தந்தாலும் பிரதீப் ரங்கநாதனின் வெற்றி என்பது நிஜமாவே ஒரு பாராட்டுத்தக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள பிரதீப் ரங்கநாதன் கடுமையாக உழைக்க வேண்டும் என இந்த தகவலை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
