Connect with us
pradeep

Cinema News

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம்!. அப்ப விக்னேஷ் சிவனுக்கு அல்வாதானா?!…

Dragon: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் ஜெயம் ரவிக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன்பின் 3 வருடங்கள் கழித்து ஹீரோ அவதாரம் எடுத்தார் பிரதீப். அவரே இயக்கி நடித்து வெளியான படம்தான் லவ் டுடே. இப்போதுள்ள இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் காதலை எப்படி கையாளுகிறார்கள், என்னென்ன தவறு செய்கிறார்கள் என்பதை காமெடி கலந்து திரைக்கதை அமைத்திருந்தார்.

இந்த படத்தில் ராதிகா, சத்யராஜ், இவானா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஏஜிஎஸ் தயாரிப்பில் மிகவும் குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த வருடத்தில் வெளியான தமிழ படங்களில் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் மற்றும் தியேட்டர் அதிபர்களுக்கு அதிக வசூலை கொடுத்த படமாக இப்படம் அமைந்தது.

dragon

dragon

ஹீரோவாக பிரதீப் வெற்றி பெற்றதும் அவரை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படம் துவங்கினார். அதற்கு எல்.ஐ.கே என தலைப்பு வைக்கப்பட்டது. அதேபோல், ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்கிற படத்திலும் பிரதீப் நடித்தார். இந்த படமும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வசூலை பெற்றது.

இயக்குனராக ஒரு படம், நடிகராக 2 படங்கள் தொடர் வெற்றியை கொடுத்திருப்பதால் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோவாக மாறியிருக்கிறார் பிரதீப். எனவே, அவரை வைத்து படமெடுக்க இளம் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

pradeep

#image_title

இந்த படத்தை கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் சுதா கொங்கராவிடம் உதவியாளராக வேலை செய்தவர். இந்த படத்தை குட் பேட் அக்லி படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ளது.

பிரதீப்பை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய படம் 50 சதவீதம் முடிந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. சொன்ன பட்ஜெட்டை தாண்டியதால் இப்படத்திற்கு மேலும் செலவு செய்ய தயாரிப்பாளர் விரும்பவில்லை. எனவே, செலவு செய்த 30 கோடியை கொடுத்துவிட்டு நீங்களே படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என விக்னேஷ் சிவன் தரப்பிடம் தயாரிப்பாளர் சொல்லிவிட்டதாக செய்திகள் வெளியானது. தற்போது பிரதீப் புதிய படத்தை துவங்கியிருப்பதால் எல்.ஐ.கே எப்போது மீண்டும் துவங்கும் என்பது தெரியவில்லை.

google news
Continue Reading

More in Cinema News

To Top