கொஞ்சமா நடிங்க?!.. பழைய மெசேஜால் மாட்டிகிட்ட பிரதீப்!.. அவங்க கண்ணுலப்பட்டா என்ன ஆகுறது!..

Published on: November 18, 2024
pradeep
---Advertisement---

பிரதீப் ரங்கநாதன் நடிகை நயன்தாரா குறித்து பல வருடங்களுக்கு முன்பு போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 வருடங்களாக வெற்றி நாயகியாக வலம் வருகின்றார். தனது சினிமா கெரியரில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தாலும் அதை எல்லாம் தாண்டி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். பின்னர் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இதையும் படிங்க: நயனின் கோபத்திற்கு நடிகைகள் லைக் போட்டதின் பின்னணி!.. ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்திருக்காங்க!..

இவர்களின் திருமணம் தொடர்பான வீடியோ டாக்குமென்டரியாக இன்று நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி இருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களாக நடிகை நயன்தாராவின் டாபிக் தான் சமூக வலைதளகங்களில் வைரலாகி வந்தது. நயன்தாராவின் டாக்குமென்ட்ரி படத்தின் டிரைலரில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் வீடியோவை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

nayanthara
nayanthara

அதில் நடிகர் தனுஷ் குறித்து மிக காட்டமாக விமர்சித்து பேசி இருந்தார். இந்த அறிக்கைக்கு பலரும் தங்களது ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள். சிலர் நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் சிலர் தனுசுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் நடிகர் தனுஷின் ரசிகர்கள் பலரும் நயன்தாராவின் பழைய வீடியோக்கள், தனுசுடன் இருக்கும் புகைப்படங்கள் என அனைத்தையும் மீண்டும் வைரலாகி வருகிறார்கள்.

அந்த லிஸ்டில் தற்போது பிரதீப் ரங்கநாதன் இணைந்து இருக்கின்றார். நானும் ரவுடிதான் திரைப்படம் ரிலீஸான சமயத்தில் பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருப்பார். அதில் நானும் ரவுடிதான் ஒரு சிறந்த படம். விஜய் சேதுபதி மிகச்சிறப்பாக நடித்திருக்கின்றார். அனிருத் இசை சூப்பராக இருக்கின்றது. விக்னேஷ் சிவனின் ஸ்டைல் சூப்பராக ஒர்க் அவுட்டாகி இருக்கின்றது.

இதையும் படிங்க: எம்ஜிஆரால் தான் பிழைத்தேன் என்று சொன்ன வில்லன் நடிகர்… ஆரம்பத்துல அப்படி திட்டினாராமே..!

மேலும் நடிகை நயன்தாரா கொஞ்சமாக நடிங்கள் என்று பதிவிட்டிருப்பார். இந்த பதிவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதிப் ரங்கநாதன் லவ் டுடே திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக மாறி இருக்கின்றார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருவதால் நயன்தாரா கண்ணிலோ அல்லது விக்னேஷ் சிவன் கண்ணிலோ பட்டால் என்ன ஆவது என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.