“என்னைய குளோஸ் பண்ணிடாதீங்கப்பா!!” … ஆடியன்ஸை கையெடுத்து கும்பிட்ட லவ் டூடே இயக்குனர்…
பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய “லவ் டூடே” திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படம், இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இக்கால தலைமுறையினரின் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதையால், பார்வையாளரை கட்டிப்போட்டுவிட்டார் பிரதீப் ரங்கநாதன். யாரும் எதிர்பாராத வகையில் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
“லவ் டூடே” திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் “கலகத் தலைவன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
உதயநிதி ஸ்டாலின், நித்தி அகர்வால் ஆகியோரின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு மார்க்கெட்டே இல்லை…எங்களுக்கு வேணாம்!..கிரேட் எஸ்கேப் ஆன சன் பிக்சர்ஸ்…
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் பிரதீப் ரங்கநாதன். அப்போது அவர் பேசுவதற்காக எழுந்திருக்கும்போது பார்வையாளர்களிடையே பெரும் கரகோஷமும் உற்சாகமும் எழுந்தது. வெகு நேரம் ஆகியும் அந்த உற்சாகம் அடங்கவில்லை.
அப்போது பிரதீப் ரங்கநாதன், “போதும் போதும்” என மைக்கில் கூறினார். அப்படியும் கரகோஷமும் விசில் சத்தமும் அடங்கவில்லை. அதன் பின் கொஞ்சம் மெதுவாக அடங்கிய பிறகு “இப்போதான் ஆரம்பிச்சிருக்கேன். குளோஸ் பண்ணீடாதீங்க” என நகைச்சுவையாக கூறினார்.
அதன் பின் பேசிய அவர் “லவ் டூடே திரைப்படத்தை வெளியிட்ட உதயநிதி சார்க்கு மிக்க நன்றி. இன்று ஒவ்வொரு நாளும் லவ் டூடே திரைப்படத்திற்கு அதிகரிக்கும் வரவேற்புக்கு உதயநிதி சாரே காரணம்” என கூறியது குறிப்பிடத்தக்கது.