அரை சதம் அடித்த டிராகன்!.. பிரதீப் ரங்கநாதன் ரொம்பவே எமோஷனலாகிட்டாரேப்பா!..

கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடித்து திரையரங்குகளில் வெளியான டிராகன் திரைப்படம் இன்று 50வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் அனைவருக்கும் நன்றி கூறி போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.
ஏஜிஎஸ் தயாரிப்பில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியானது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கௌதம் மேனன், கயாடு லோஹர், மிஷ்கின், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 37 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த படம் 150 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. மேலும் இப்படத்தில் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து படிப்பு வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், மற்றவர்களை ஏமாற்றினால் அந்த கில்டி ஃபிலிங் நமக்கு எந்த அளவிற்கு மன உருத்தலை தரும் என்பதையும் தெளிவான கருத்தாக இளைஞர்களிடம் கொண்டு சேர்த்துள்ளார். என்னதான் டிராகன் படம் ஜாலியாக இருந்தாலும் பல கருத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் டிராகன் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய போது தனக்கு முதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க பலரும் யோசித்தனர். ஆனால், தற்போது ஒரு படத்திற்கே மூன்று நடிகைகள் ஹீரோயினாக நடித்துள்ளனர் எனக் கூறினார்.
இந்நிலையில் தற்போது டிராகன் திரைப்படம் ரீலிஸாகி 50வது நாள் என்பதால் அனைவருக்கும் நன்றி கூறி போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். மேலும், பிரதீப் அடுத்த படத்திற்கான பூஜையையும் முடித்து படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டார். அந்த படத்தில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் மாறிய நிலையில், ஒட்டுமொத்த படக்குழுவும் 50வது நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.