லவ் டுடே பிரதீப் சொன்ன சயின்ஸ் பிக்சன் கதை... ஓகே சொல்வாரா விஜய்?.. பரபர தகவல்...
ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படமே சூப்பர் ஹிட். ஆனாலும், 3 வருடங்கள் காத்திருந்து ஒரு கதையை உருவாக்கி அவரே ஹீரோவாக நடித்தார். அந்த திரைப்படம்தான் லவ் டுடே. இந்த படம் மாஸ் ஹிட் ஆகி வசூலை அள்ளியது.
தற்போது 2 மொழிகளிலும் பிரதீப்புக்கு மார்க்கெட் எகிறியுள்ளது. இதற்கிடையில் நடிகர் விஜய்க்கு ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை சொல்லி இருக்கிறாராம் பிரதீப். இப்படத்தில் நடிக்க விஜய் சம்மதித்தால் அப்படத்தை இயக்குவது. இல்லையேல், மீண்டும் தானே ஹீரோவாக நடிப்பது என முடிவெடுத்துள்ளாராம் பிரதீப்.
வாரிசு படத்தை முடித்துள்ள விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பிரதீப் கூறிய கதை அவருக்கு பிடித்திருந்தால் அந்த கதையில் நடிக்க வாய்ப்புண்டு.
ஏற்கனவே, விஜயை வைத்து பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அப்படத்தால் சில கோடி நஷ்டங்களை சந்தித்தது. எனவே, விஜயிடம் மீண்டும் கால்ஷீட் கேட்டு காத்திருக்கிறார்கள். தற்போது அதே நிறுவனத்திற்குதான் லவ் டுடே ஹிட் கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். எனவே, இந்த கூட்டணி மீண்டும் இணைய அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: வாழ்க்கை கொடுத்தவர்!.. லட்ச ரூபாய்க்காக நன்றியை மறந்தாரா இளையராஜா?..