நானே இப்போ விஜய்க்கு போட்டி தெரியும்ல! - விஜயை இயக்க மறுத்த லவ்டுடே பிரதீப்
விஜய் இப்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். லியோ படம் முக்கால்வாசி முடிந்த நிலையில் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு தெரிவித்தனர். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த காம்போ கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்ட கூட்டணி என்று வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறினார் .ஆனால் கோடம்பாக்கத்தில் சில பேர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கஸ்டடி படத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக தான் விஜய் வெங்கட் பிரபுவை ஓகே செய்தார் என்று கூறுகின்றனர்.
ஆனால் முதலில் ஏஜிஎஸ் தயாரிப்பில் விஜய்யை வைத்து பிரதீப் ரங்கநாதனை தான் அந்த நிறுவனம் இயக்கச் சொல்லி இருக்கிறது. ஏற்கனவே லவ் டுடே படம் பெரிய ஹிட் ஆனதால் ஏஜிஎஸ் நிறுவனம் பிரதீப் ரங்கநாதனுக்கு மூன்று படங்களை ஒப்பந்தம் செய்தது. அதன் காரணமாகவே விஜயை வைத்து பிரதீப் ரங்கநாதனை ஒரு படத்தை இயக்கச் சொன்னார்களாம்.
ஆனால் பிரதிப்போ "ரசிகர்கள் என்னை ஒரு நடிகராகவே அங்கீகரித்து விட்டனர். நான் போகும் இடங்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட ரசிகர்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றனர் .ஆதலால் என்னுடைய அடுத்த படங்களை நான் இயக்கி நடித்தாலும் சரி நான் நடித்தாலும் சரி மூன்று வருடங்களுக்கு ஒரு நடிகராகவே தான் இருப்பேன். எந்த படத்தையும் இயக்க மாட்டேன்" என்று சொன்னதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
இதனாலையே விஜயை இயக்க பிரதீப் ரங்கநாதன் மறுத்துவிட்டாராம். இதைப்பற்றி கூறிய வலைப்பேச்சு பிஸ்மி பிரதீப் ரங்கநாதன் ஒரு மூன்று படங்களில் நடித்தால் விஜயின் அந்த ஒரு புகழை ஈசியாக அடைந்து விடுவார். இப்படி இருக்கையில் எப்படி அவர் விஜயை வைத்து படத்தை இயக்குவார் என்று கூறினார்.
இதையும் படிங்க : திடீரென ரிலையன்ஸிடம் சரணடைந்த விஜய்! திணற வைக்கும் தளபதியின் அல்ட்ரா மைண்ட்!