Delhi Ganesh: பிரதீப் ரெங்கநாதன் செஞ்ச துரோகம்.. வருத்தப்பட்டு பேசிய டெல்லி கணேஷ்

Published on: November 11, 2024
ganesh
---Advertisement---

Delhi Ganesh: நேற்று பழம்பெரும் குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவர் மறைவிற்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். சத்யராஜ், செந்தில் , ஒய்.ஜி மகேந்திரன், கார்த்தி, சிவக்குமார் என பல்வேறு நடிகர்கள் டெல்லி கணேஷுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். டெல்லி கணேஷ் எந்த கதாபாத்திரமானாலும் அதை திறம்பட நடித்துக் கொடுப்பதில் வல்லவர்.

ரஜினியுடன் பல படங்கள்: அவருடைய திறமையை கமல் நன்கு பயன்படுத்திக் கொண்டார். அடிப்படையிலேயே டெல்லி கணேஷுக்கு ஹூயூமர் வரும் என்பதால் கமலின் ஆரம்பகால படங்களில் டெல்லி கணேஷ் இருப்பார். ஏனெனில் கமலின் ஆரம்பகால படங்களும் ஹியூமர் படங்களாகவே அமைந்திருந்தது. ரஜினியுடன் ராகவேந்திரா, எங்கேயோ கேட்ட குரல் என பல ரஜினி படங்களில் ரஜினியுடன் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: Vijay sethupathi: விஜய் சேதுபதியின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்… பிரபல இயக்குனரின் ’ரியல் லைஃப்’ சம்பவமாம்…

ஆரம்பத்தில் நாடகங்களில் பணியாற்றிய டெல்லி கணேஷின் நடிப்பை பார்த்த கே.பாலசந்தர் பட்டின பிரவேசம் என்ற படத்தில் நடிக்க வைத்தார். சினிமாவில் நடிப்பதற்கு முன் விமானப்படை அதிகாரியாக பணியாற்றிய டெல்லி கணேஷ் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் அவர் வேலையை விட்டு நடிக்க வந்தார்.

கமல் சொன்ன அறிவுரை: தொடர்ந்து பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய டெல்லி கணேஷ் சிந்து பைரவி படத்தில் உண்மையான மிருதங்க வாசிப்பாளராகவே நடித்தார். அந்தப் படத்தில் அவரிடன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பிறகு வில்லனாக நடிக்க வேண்டும் என அபூர்வ சகோதரர் படத்தில் கமல் கேட்டார். ஆனால் வில்லனாக நடிக்கனுமா என யோசிக்க கமலோ ‘உங்க திறமை பற்றி எனக்கு தெரியும்.துணிந்து நடிங்க.. வொர்க் அவுட் ஆகும் ’ என சொல்ல அந்தப் படத்திலும் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.

love
love

அடுத்த தலைமுறையினர் சினிமா கெரியரின் வளர்ச்சிக்கு டெல்லி கணேஷின் முக்கியத்துவம் இருந்து வந்தது. குட் நைட் பட நடிகர் மணிகண்டன் கூட ஆரம்பத்தில் ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்க அதில் டெல்லி கணேஷ் நடித்துக் கொடுத்தார். அதை போல் பிரதீப் ரெங்க நாதன் லவ் டுடே படத்தை முதலில் ஷார்ட் ஃபிலிமாக எடுத்திருக்கிறார். அதில் சத்யராஜ் கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் தான் நடித்தாராம்.

ஒன்னுமே இல்லாமல் வந்த பிரதீப்:அப்போது பிரதீப் ரெங்கநாதன் டெல்லி கணேஷிடம் ‘ஜீரோ பட்ஜெட்டில் ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்க போகிறேன். உங்களுக்கான டிராவல் அலோவன்ஸ் மற்றும் சாப்பாடு செலவு மட்டும்தான் கொடுக்க முடியும்’ என கேட்டிருக்கிறார். இருந்தாலும் டெல்லி கணேஷ் ‘உங்கள மாதிரி இளைஞர்களும் சினிமாவில் வரவேண்டும். நான் நடிக்கிறேன்’ என கூறி நடித்தாராம்.

இதையும் படிங்க: Ajith: இத்தனை சர்ஜரி செய்தும் அஜித்தின் உடல் ஆரோக்கியத்துக்கு காரணம்.. சுப்ரீம் சுந்தர் கூறிய தகவல்

அதே இந்த ஷார்ட் ஃபிலிமை படமாக எடுக்கும் போது டெல்லி கணேஷை பிரதீப் ரெங்கநாதன் பயன்படுத்தவில்லை. வியாபாரத்துக்காக சத்யராஜை நடிக்க வைத்திருக்கிறார். இதை ஒரு பேட்டியில் மிகவும் வருத்தப்பட்டு கூறினாராம் டெல்லி கணேஷ்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.