பாடகி கொடுத்த பலான போஸ்....அதிர்ந்து போன நெட்டிசன்கள்...

சிங்கப்பூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர் பிரகதி குருபிரசாத். அமெரிக்காவில் கர்நாடக இசையை பயின்றவர். தமிழ் பெண் என்பதால் தமிழ் சினிமா பாடல்கள் மீதும் அதிக ஆர்வம் உண்டு. எனவே, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டு ரன்னர் பட்டம் பெற்றவர்.
பாலா இயக்கிய பரதேசி, தாரை தப்பட்டை படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். அதோடு, பாலா இவரை தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்கவும் முடிவெடுத்தார். ஆனால், அது நடக்கவில்லை.. அமெரிக்காவில் சில நாடகங்களிலும் நடித்துள்ளார். சில ஆல்பம் பாடல்களையும் அவர் பாடியுள்ளார். அதன்பின் தமிழில் பல இசையமைப்பாளர்களின் இசைகளில் பாடியுள்ளார். மாடல் துறையிலும் ஆர்வம் உள்ளவர்.
இந்நிலையில், திடீரெனெ கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
வழக்கமாகா சினிமாவில் வாய்ப்பு தேடும் சில நடிகைகள்தான் இப்படி போஸ் கொடுப்பார்கள். இவருக்கு என்னாச்சு? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.