Pragya nagra: டெல்லியில் பிறந்து வளர்ந்த பிரக்யாவுக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசை அதிகமாக ஏற்பட்டது. அவரின் அப்பா ராணுவத்தில் இருந்ததால் வேலை காரணமாக அடிக்கடி சென்னை வந்தார். அவரோடு அடிக்கடி சென்னை வந்த பிரக்யாவுக்கு சென்னை பரிச்சயம் ஏற்பட்டது.

Also Read
சில விளம்பர படங்களிலும் நடித்தார். சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் குறும்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படி இவர் நடித்த லாக்டவுன் காதல் எனும் குறும்படம் யுடியூப்பில் வெளியானது. அஞ்சலி எனும் சீரியலிலும் இவர் நடித்தார்.

எனவே, ரசிகர்களை கவரவும், சினிமாவில் வாய்ப்புகளை பெறவும் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவதுதான் ஒரே வழி என புரிந்துகொண்ட பிரக்யா களத்தில் இறங்கி பல புகைப்படங்களை வெளியிட்டார். இப்போது வரை அது தொடர்ந்து வருகிறது.

ஜீவா ஹீரோவாக நடித்து படுதோல்வி அடைந்த வரலாறு முக்கியம் படத்தில் நடித்திருந்தார். இப்போது N4 என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிடுவதையும் அவர் நிறுத்தவில்லை. அந்த வகையில், தலையில் ஈரம் சொட்ட சொட்ட கவர்ச்சி காட்டி பிரக்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க செய்துள்ளது.




