பொசுக்குன்னு இப்படி மாறிட்டியே!...நடிகைக்கு ஹார்ட்டீனை பறக்கவிடும் ரசிகர்கள்....
நடிகை, மாடல் என வலம் வருபவர் பிரக்யா நாக்ரா. இவர் ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர்.
டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது.
டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது.
நூறுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில் அறிமுகமானார். இன்ஸ்டாகிராம் மாடலாகவும் வலம் வரும் இவரை அதில் 6 லட்சம் பேர் பின்பற்றி வருகின்றனர்.
வழக்கமாக முன்னழகு மற்றும் இடுப்பழகை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த பிரக்யா தீடீரன சுடிதார் அணிந்து டீசண்ட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஆனாலும், க்யூட்டாக இருப்பதாக கூறி ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.