BB Tamil9: நான் உள்ளே போறேன்.. கம்ருதீன் அப்போ இருந்தா அவ்வளவுதான்.. வார்னிங்க் கொடுத்த பிரஜன்

Published on: January 3, 2026
prajin
---Advertisement---

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. டிக்கெட் டு பினாலேவுக்காக போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போட்டு வருகின்றனர். எப்படியாவது அந்த டிக்கெட்டை பெற்று விட வேண்டும் என்ற முயற்சியில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்து வருகிறார்கள். அதனால் மற்றவர்களுக்கு எப்படி பாதிப்பு வந்தாலும் சரி, யார் எக்கேடுக்கெட்டு போனாலும் சரி என ஒரு சில போட்டியாளர்கள் உள்ளே விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையில் பார்வதியும் கம்ருதீனும் செய்கிற ஒரு சில வேலைகள் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் மன உளைச்சலையும் எரிச்சலையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் நடந்த கார் டாஸ்க்கில் கூட சாண்ட்ராவை வெளியே தள்ளிவிட்டு பார்வதியும் கம்ருதீனும் இணைந்து விளையாடிய அந்த கேம் போட்டியாளர்கள் உட்பட ரசிகர்களுக்கும் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தியது. கேமுக்காக இப்படியும் மனசாட்சி இல்லாமல் செய்வார்களா ? பணத்துக்காக இந்த அளவுக்கு இறங்குவார்களா என்றெல்லாம் வெளியிலிருந்து பார்க்கும் ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.

அது மட்டுமல்ல கடந்த சீசனில் எதுவுமே செய்யாத பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்து அனுப்பினார்கள். ஆனால் இந்த சீசனில் வெளிப்படையாகவே கம்ருதீனும் பார்வதியும் செய்கிற ஒரு சில வேலைகள் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. ஆனால் இவர்களுக்கு எந்த ஒரு வார்னிங்கையும் கொடுத்த மாதிரி தெரியவில்லை. பேட் டச், இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகள், அவர்களுடைய சில செய்கைகள் என அந்த நிகழ்ச்சியை பார்க்கும் சின்ன குழந்தைகளுக்கு கூட அது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அவர்களை நிர்வாகமும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியும் கண்டித்ததாக எதுவுமே தெரியவில்லை.

கடைசியில் இவர்களில் யாராவது கப் அடித்து விட்டால் கூட இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றெல்லாம் ரசிகர்கள் பல பேர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரஜன் நேற்று பத்திரிகையாளர் பேட்டியில் கம்ருதீனை கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். செலிபிரிட்டி ரவுண்டில் நான் உள்ளே போகிறேன். அப்போது கம்ருதீன் அங்கே உள்ளே இருந்தால் அவருக்கு கெட்ட நேரம். இல்லாவிட்டால் நல்ல நேரம்.

இதை ஒரு வார்னிங்காக கூட எடுத்துக்கலாம் என்று கூறியுள்ளார். ஏனெனில் பெண் போட்டியாளர்கள் பெண்களுடன் மோத வேண்டும். ஆண் போட்டியாளர்கள் ஆண்களுடன் மோத வேண்டும். அதை விட்டுவிட்டு கம்ருதீன் சாண்ட்ராவை வெளியே தள்ளியிருக்கிறார். பார்வதி கம்ருதீன் பிரச்சனையில் ஒரு கட்டத்தில் அவர்களுக்கு துணையாக இருந்தவர் சாண்ட்ரா.

ஆனால் இப்போது பார்வதியும் கம்ருதீனும் ஏன் இப்படி விளையாடுகிறார்கள் என்று தெரியவில்லை. கம்ருதீனுக்காக பார்வதி விளையாடுகிறாரா இல்லை பார்வதிக்காக கம்ருதீன் விளையாடுகிறாரா என்று தெரியவில்லை. நான் உள்ளே போகிறேன் போகும்போது தெரியும் என்று பிரஜன் நேற்று கூறியுள்ளார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.