த்ரிஷாவை காதலிக்கவும் முடியும்.. தந்தையாக ஜொலிக்கவும் முடியும்.. வெரைட்டி நடிப்பில் பின்னி பெடலெடுத்த பிரகாஷ் ராஜ்..
தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழித் திரைப்படங்களில் டாப் வில்லனாக திகழ்ந்து வருபவர் பிரகாஷ் ராஜ். வில்லன் கதாப்பாத்திரம் மட்டுமல்லாது சிறந்த குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து வருபவர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெறித்தனமான ஹிட் அடித்த திரைப்படம் “கில்லி”. இதில் த்ரிஷாவை வில்லத்தனமாக காதலிக்கும் “முத்துப்பாண்டி” என்ற கதாப்பாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். “செல்லம் ஐ லவ் யூ” என்று பிரகாஷ் ராஜ் பேசும் வசனம் இப்போது வரை மிகவும் பிரபலமான வசனமாக திகழ்கிறது.
இவ்வாறு வில்லத்தனம் காட்டி த்ரிஷாவை காதலித்து மக்களின் மனதில் முத்துப்பாண்டியாக பதிந்த பிரகாஷ் ராஜ் தான் “அபியும் நானும்” என்ற திரைப்படத்தில் த்ரிஷாவிற்கு அன்பான தந்தையாகவும் நடித்திருப்பார்.
“அபியும் நானும்” திரைப்படத்தில் மிகவும் செல்லம் கொடுக்கும் அப்பாவாக கலக்கிய பிரகாஷ் ராஜ்ஜின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனினும் முத்துப்பாண்டி என்ற கதாப்பாத்திரத்தின் எந்த நியாபகத்தையும் ரசிகர்களின் மனதில் ஒரு சதவீதம் கூட உருவாக்காமல் தந்தை கதாப்பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக பொருந்தியிருப்பார் பிரகாஷ் ராஜ்.
தமிழ் சினிமாவில் இது மிகவும் வழக்கமான ஒன்று தான் என்றாலும் “முத்துப்பாண்டி” என்ற மக்களிடம் ரீச் ஆன ஒரு கதாப்பாத்தை மறக்கடிக்கும் விதமாக அவரின் நடிப்பு திகழ்ந்தது. இவ்வாறு ஒரு சிறப்பான வெரைட்டி நடிகராக திகழ்கிறார் பிரகாஷ் ராஜ்.
மேலும் தற்போது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திலும் பிரகாஷ் ராஜ் த்ரிஷாவிற்கு தந்தையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.