பிரகாஷ் ராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தெரியுமா? இதுக்கு தான் இப்படி ஒரு பெயரு வச்சாராம்... அடடா!
பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்திருக்கும் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
செல்லம் என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் கொடுத்தவர் பிரகாஷ் ராஜ். அப்பாவா நடித்தால் அமைதி, நண்பனாக நடித்தால் நம்பிக்கை, வில்லனாக நடித்தால் அதிரடி என பன்முகம் காட்டி வருபவர். தொடர்ச்சியாக பல மொழிகளில் நடித்தாலும் கில்லி படத்தில் அவரின் வில்லன் கதாபாத்திரம் இன்னமும் பல நடிகர்களுக்கு கம்பசூத்திரமாகவே இருக்கிறது.
தமிழ்த் திரைப்படமான காஞ்சிவரம் படத்துக்காக 2007ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். அத்துடன் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998ம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், பிரகாஷ் ராஜ் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு டூயட் மூவிஸ்’னு பெயர் வைத்து இருக்கிறார். அதற்கு காரணம் அவரின் முதல் படமான டூயட் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களிடம் ரீச் கொடுத்ததால் தானாம்.