சாரி எனக்கு பிடிக்கல!.. ரஜினி படத்தில் நடிக்க மறுத்த பிரகாஷ்ராஜ்!.. ஏன் தெரியுமா?..
பிரகாஷ் ராஜ் தமிழ் சினிமாவின் பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் மிகவும் சொற்பமான திரைப்படங்களிலேயே நடித்துள்ளார்.
கமல்ஹாசனுடன் இணைந்து “வசூல் ராஜா எம்பிபிஎஸ்”, “வேட்டையாடு விளையாடு” ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரகாஷ் ராஜ், ரஜினிகாந்துடன் “படையப்பா”, “அண்ணாத்த” ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இவ்வாறு மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் தலா இரண்டு திரைப்படங்களே நடித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
இந்த நிலையில் பிரகாஷ் ராஜிற்கு “பாபா” திரைப்படத்தில் முதல்வர் கதாப்பாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அத்திரைப்படத்தில் நடிக்க பிரகாஷ் ராஜும் ஒப்புக்கொண்டார். அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை அட்வான்ஸாகவும் கொடுக்கப்பட்டது. அவர் நடிக்கும்போது அவரின் கதாப்பாத்திரம் மிக முக்கியமான கதாப்பாத்திரமாக இருந்திருக்கிறது. அவரை வைத்து ஒரு காட்சியும் படமாக்கப்பட்டதாம்.
அதன் பின் அவரை அழைத்த ரஜினிகாந்த், “உங்கள் கதாப்பாத்திரத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கிறோம்” என கூறியிருக்கிறார். உடனே பிரகாஷ் ராஜ், “பரவாயில்லை நான் நடிக்கிறேன்” என ரஜினியிடம் கூறிவிட்டு மறுபக்கம் மேனேஜரை அழைத்து, “எனது கதாப்பாத்திரம் சின்னதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரமாக இருக்கிறதா? என கேளுங்கள்” என்று கூறினாராம்.
அதன்படி ஒரு உதவி இயக்குனரிடம் கேட்க, அவரோ, “சார், கொஞ்சம் உங்க கதாப்பாத்திரத்தை குறைச்சிருக்கோம். ஆனா நல்ல வெயிட்டான ரோல்தான்” என தயங்கி தயங்கி கூறியிருக்கிறார். இதனை கேட்ட பிரகாஷ் ராஜ், “நமது ரோல் முக்கியத்துவம் வாய்ந்த ரோல் இல்லை” என அவரே புரிந்துகொண்டாராம். உடனே ரஜினியிடம் சென்ற பிரகாஷ் ராஜ், “சார், உங்க கூட நடிக்கிறதுங்குறது என்னோட ஆசை. ஆனால் முக்கியத்துவம் இல்லாத கதாப்பாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது. நான் விலகிக்கொள்கிறேன்” என கூறினாராம். அதற்கு ரஜினிகாந்த், “நீங்கள் கூறுவது சரிதான். நான் கொடுத்த அட்வான்ஸை திரும்ப தரவேண்டாம். அது உங்களிடமே இருக்கட்டும்” என தாராள மனதுடன் நடந்துகொண்டாராம். அதன் பின் அந்த கதாப்பாத்திரம் வேறு ஒரு வட இந்திய நடிகரை நடிக்க வைத்தாராம் ரஜினிகாந்த்.
இதையும் படிங்க: நான் சினிமாவுக்கு வந்தது இப்படித்தான்!.. முரளி சொன்ன சுவாரஸ்ய பிளாஷ்பேக்…