இன்னும் எங்கள பிரகாஷ் ராஜ் தான் பாத்துக்கிறாரு...! முன்னாள் மனைவி கூறும் அதிர்ச்சி தகவல்..!
தன் அதிரடியான வில்லத்தனத்தால் தமிழ் சினிமாவையே அதிர வைத்த நடிகர் பிரகாஷ் ராஜ்.தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் கலக்கி வருபவர். இவரின் ஆக்ரோஷமான நடிப்பை பார்த்து ஒட்டுமொத்த சினிமாவுமே வாயடைத்து போனது.
சினிமாவில் வருவதற்கு முன் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தான் பங்கேற்றிருக்கிறார்.அதன் பின் தமிழில் பாலசந்தரின் படமான டூயட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் நினைவாக தன் புரடக்ஷன் நிறுவனத்திற்கு டூயட் மூவிஸ் என பெயர் வைத்துள்ளார். தாய்மொழி கன்னடம் என்றாலும் மற்ற தென்னிந்திய மொழிகளை சரளமாக பேசுவதில் வல்லவர்.
இவர் பிரபல நடன மங்கை டிஸ்கோ சாந்தியின் தங்கையும் நடிகையுமான லலிதா குமாரியை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாட்டால் இவர்கள் பிரிந்து விட்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பின்னர் பிரகாஷ் ராஜ் இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நடிகை லலிதா குமாரி ஒரு பேட்டியில் பிரகாஷ் ராஜை பற்றி நினைவு கூர்ந்து பேசினார். நல்ல மனிதர். இன்னும் என்னுடைய இரண்டு குழுந்தைகளையும் அவர்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம் என கூறினார்.