ஒரு படம் எந்த அளவிற்கு பாராட்டை பெறுகிறதோ அதைவிட அதிகமாக விமர்சனங்களையும் சந்திக்கும். அந்த வகையில் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய் பீம் படம் ஒட்டுமொத்தமாக பாராட்டை பெற்று வந்தாலும், சிலர் படத்தை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி வன்னியர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்த நிலையில், படத்தில் இடம்பெற்ற அவர்கள் கூறிய அந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதோடு விடாமல் படத்தில் இன்னும் ஒரு சில காட்சிகளையும் குறை கூறி வருகிறார்கள்.
அதன்படி படத்தில் காவல் அதிகாரியாக வரும் நடிகர் பிரகாஷ்ராஜ் விசாரணையின் போது ஹிந்தியில் பேசும் வடமாநில நபர் ஒருவரை கன்னத்தில் அறைந்து தமிழ் பேசுமாறு கூறுவார். இந்த காட்சிக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் ஜெய்பீம் படத்தில் இடம் பெற்ற கன்னத்தில் அறைந்த காட்சி சரிதான் என நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், “ஜெய் பும் படத்தில் ஹிந்தி பேசியவரை கன்னத்தில் அறைந்த காட்சியை பற்றி பேசுபவர்களுக்கு படத்தில் காட்டப்படும் பழங்குடிகளின் துயரமும் அவர்களுக்கு நேரும் அநியாயங்களும் கண்ணுக்கு தெரியவில்லை போலும்.
அவர்களின் நோக்கம் இதன் மூலம் தெளிவாகிறது. விசாரணையை ஏமாற்ற தமிழ் தெரிந்துகொண்டே ஹிந்தியில் பேசும் ஒருவரிடம் அந்த போலீஸ் அப்படித்தான் நடந்து கொள்வார். என்னுடைய கருத்தும் அதுதான்” என தெரிவித்துள்ளார்.
குறை கூற வேண்டும் என்ற நோக்கில் படம் பார்ப்பவர்களுக்கு அனைத்துமே குறையாகத்தான் தெரியும் என்பது போல, ஜெய் பீம் படத்திற்கு எதிராக எழும் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஏதோ காரணம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இவர்கள் கூறுவது போல உள்ளது. இவர்களை போன்றவர்களுக்கு பிரகாஷ் ராஜின் விளக்கம் சரியானது தான்.
Kanguva: கங்குவா படம்…
அமரன் திரைப்படத்தின்…
Nayanthara: கேரளாவை…
கமலை வைத்து…
Ajithkumar: தமிழ்…