வாரிசு படத்தில் உங்களுக்கான ரோல்...! பிரகாஷ்ராஜின் பழைய ஃபார்ம்...கெத்தா சொன்ன நம்ம செல்லம்...
விஜய் தற்போது வம்சி என்ற தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவுக்கு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
கூடவே இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, சங்கீதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் படத்தை பற்றி தெரிந்து கொள்ள நடிகர் பிரகாஷ் ராஜை சந்தித்த போது சில தகவல்களை நமக்காக பகிர்ந்தார்.
அவர் கூறும்போது செல்லத்தோடு நடிச்சு கிட்டத்தட்ட 15 வருஷம் ஆச்சு என விஜயை பற்றி கூறினார். மேலும் இந்தப் படத்தில் உங்களுக்கான ரோல் என்ன என கேட்ட போது கதையை பற்றி சொல்லலாமா என தெரியவில்லை. ஆனால் உங்கள் செல்லம் திரும்பவும் வரபோகுது என கூறினார்.
இதிலிருந்து பிரகாஷ் ராஜின் அந்த வில்லத்தனத்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு திரையில் பார்க்கலாம் என தெரிகிறது. கில்லி, வில்லு, சிவகாசி போன்ற படங்களில் இருந்த விஜய் , பிரகாஷ் ராஜ் இணையை மீண்டும் வாரிசு படத்தில் காண ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர்.