சொந்தப் படத்துக்கே எவனும் செய்ய மாட்டான்! அந்த படத்துக்காக கோடியை தூக்கிக் கொடுத்த பிரகாஷ்ராஜ்

by Rohini |
prakash
X

prakash

தமிழ் திரையுலகில் எப்படி ரகுவரன் தனது வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் மிரள வைத்தாரோ அதே போல தனது அபார நடிப்பால் அனைவரையும் நடுங்க வைத்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ் மொழி மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழி சினிமாக்களிலும் தனது வில்லத்தனத்தை காட்டி வருகிறார் பிரகாஷ்ராஜ்.

prakash1

prakash1

ஆனால் சமீபகாலமாக அவரை தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலேயே பார்க்க முடிகின்றது. அதிலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் பிரகாஷ்ராஜ். குறிப்பாக ஜெய்பீம் படத்தில் ஒரு அமைதியான வக்கீலாக நடித்து வரவேற்பை பெற்றிருப்பார்.

இதையும் படிங்க : ஷங்கருக்கு, மகள்களால் வந்த பிரச்சனை!!..குடும்ப பிரச்சினையால் குலைந்து போன திரைப்பட வாழ்க்கை!!..

நடிப்பையும் தாண்டி அவருக்கே உரிய பாணியில் பேசும் வசனமும்தான் மக்களை ரசிக்க வைக்கிறது. பிரகாஷ் ராஜ் என்றாலே இன்று வரை அனைவரின் மனதில் நிற்பது செல்லம் என்ற அந்த ஒரு வார்த்தைதான். கில்லி படத்தில் அவரின் வில்லத்தனமான நடிப்புதான் இன்று வரை அவரின் பெருமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.

prakash2

prakash2

வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் எந்த ஒரு நடிகருக்கு பின்னாடி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் பிரகாஷ் ராஜுக்கு பின்னனியிலும் ஒரு ப்ளாஸ் பேக் கதை இருக்கிறது. பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் டி.சிவா. இவர்தான் பிரகாஷ்ராஜை பற்றி ஒரு தகவலை கூறியிருக்கிறார்.

டி.சிவா அரவான் என்ற படத்தை தயாரித்திருக்கிறார்.அரவான் 2012 இல் வெளியான ஒரு வரலாற்றுத் தமிழ்த் திரைப்படம். இப்படத்தின் கதை சு. வெங்கடேசன் எழுதிய 2011 ஆண்டுக்கான இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற புதினமான காவல் கோட்டத்தில் வரும் ஒரு துணைக் கதை ஆகும். இந்தப் படத்தை வசந்தபாலன் இயக்கினார். நடிகர் ஆதி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

prakash3

prakash3

இந்தப் படத்திற்காக ஏகப்பட்ட செலவுகளை செய்திருக்கிறாராம் டி.சிவா. ஆனால் கடைசியில் பட ரிலீஸ் செய்யும் சமயத்தில் பணம் ஏதும் இல்லையாதலால் மிகவும் கஷ்டத்தில் இருந்திருக்கிறார். இந்த விஷயம் பிரகாஷ்ராஜுக்கு தெரியவர போனில் தொடர்பு கொண்டு நேராக அவர் அலுவலகத்திற்கே வந்து விட்டாராம் பிரகாஷ் ராஜ். நிலைமையை அறிந்து உடனடியாக ஒரு கோடியை எடுத்து சிவா கையில் கொடுத்தாராம் பிரகாஷ்ராஜ்.

இதையும் படிங்க : என்னது ‘மாவீரன்’ திருட்டு கதையா? திருட்டுக்கு உடந்தையாக இருந்த யோகிபாபு – என்ன மக்கா இப்படி மாட்டிக்கிட்டீயே

அந்த பணத்தை வைத்துதான் அரவான் படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார் சிவா. அதுமட்டுமில்லாமல் 10 நாள்கள் அவர் கூடவே இருந்து மற்ற பிரச்சினைகளையும் சரி செய்திருக்கிறாராம் பிரகாஷ்ராஜ். இந்த தகவலை சிவா ஒரு பேட்டியில் கூறினார்.

Next Story