கில்லி பாத்துட்டு உன்ன லவ் பண்ணேன்... பிரகாஷ்ராஜிடம் சண்டை போட்ட பெண்மணி!...
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக நுழைந்து ஹீரோ, குணச்சதிர நடிகர் ஒரு கலக்கு கலக்கியவர் பிரகாஷ்ராஜ். வித்தியாசமான நடிப்பிலும், டெரர் நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என கலக்கியவர். இப்போது அப்பா வேடங்களில் அசத்தி வருகிறார்.
தரணியின் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த கில்லி படத்தில் முத்துப்பாண்டியாக அசத்தலான நடிப்பை கொடுத்திருந்தார். 2004ம் வருடம் வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் திரிஷாவின் மீது வெறித்தனமான காதலை வைத்திருக்கும் நபராக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: நாசரைக் கண்ணீர் விட்டு அழ வைத்த சிவாஜி… அதுக்காக இப்படியா சொல்வாரு நடிகர் திலகம்?
20 வருடங்கள் கழித்து சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படம் 20 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இது அப்படத்தில் நடித்த விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் அப்பட இயக்குனர் எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. எனவே, பல ஊடகங்கள் பிரகாஷ்ராஜை பேட்டி எடுத்தது. அப்போது அப்படம் தொடர்பாக பல அனுபவங்களை பிரகாஷ்ராஜ் பகிர்ந்துகொண்டார்.
ஒருமுறை ஒரு இடத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தேன். ஒரு பெண் என்னை பார்த்துவிட்டு அவரின் அம்மாவிடம் ஏதோ சொன்னார். அந்த பெண்மணிக்கு 45 வயது இருக்கும். அவர் என் அருகில் வந்து வீடியோ எடுக்க துவங்கிவிட்டார். ’ஏம்மா சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன். தொந்தரவு பண்ணாம இருங்க’ என நான் சொன்னவுடன் அவருக்கு கோபம் வந்துவிட்டது.
‘யோவ்.. கில்லி பாத்துட்டு உன்ன லவ் பண்ணேன்யா. இவன காட்டிக்கிட்டேன்.. இவள பெத்துக்கிட்டேன்.. எத்தன வருஷ ஆசை.. உன்ன வீடியோ எடுக்கக் கூடாதா?’ என சண்டைக்கு வந்துவிட்டார். அவரின் அன்பை பார்த்து நெகிழ்ந்துபோய் அவரை சமாதனம் செய்தேன். இப்படி அன்பையும், பாசத்தையும் நாம் என்ன செய்ய முடியும்?’ என பிரகாஷ்ராஜ் நெகிழ்ந்து சொன்னார்.
அதோடு ‘கில்லி படத்தில் நான்தான் ஹீரோ. என் கதையில் விஜய்தான் வில்லன். தனலட்சுமியை உருகி உருகி காதலிக்கும் என்னிடமிருந்து அவளை தூக்கிக்கொண்டு போய்விட்டான். அவன்தான் வில்லன்’ என பேசியிருந்தார் பிரகாஷ்ராஜ்.