கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து சௌந்தர்யா, சிவாஜி கணேசன், மணிவண்ணன், நாசர், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து 1999ம் வருடம் வெளியான திரைப்படம்தான் படையப்பா. இந்த படத்தை ரஜினி சொந்தமாக தயாரித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. ரஜினியின் சினிமா கெரியரில் ஒரு முக்கிய படமாகவும் படையப்பா பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் படையப்பா திரைப்படம் புதிய டிஜிட்டல் பொலிவுடன் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வசூலை பெற்றது. விஜயின் கில்லி பட ரீ-ரிலீஸுக்கு இணையாக இந்த படத்திற்கும் நல்ல வசூல் இருந்தது. இன்னமும் சில தியேட்டர்களில் படையப்பா திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

படையப்பா படத்தில் ஒருசின்ன வேடத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். அந்த படம் வெளியாகும் போது அவர் முக்கிய நடிகராக இருந்தார். அப்படியிருக்க அவர் ஏன் ஒரு காட்சியில் நடித்தார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அப்போது எழுந்தது. இந்நிஅலியில், தற்போது இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார் ‘படையப்பா படத்தில் வரும் போலீஸ்காரராக பிரகாஷ் ராஜ் வரும் காட்சியில் நான்தான் நடிக்க வேண்டியது.
அந்த வேடத்தை எனக்காகவே உருவாக்கியிருந்தேன். ஆனால் பிரகாஷ்ராஜ்தான் ‘ரஜினியுடன் நான் நடிச்சதே இல்லை.. காசு கூட வேண்டாம்.. எனக்கு ஒரு ரோல் கொடுங்க.. ரெண்டு நாள் சூட்டிங் இருந்தாலும் பரவாயில்லை’ என்று சொல்ச்லி அந்த ரோலை வாங்கி நடிச்சார்’ என்று சொல்லி இருக்கிறார்.
