தமிழ் சினிமாவில் முன்னனி வில்லன் நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் சினிமாவில் வருவதற்கு முன்னரே பல நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தாராம். சிவாஜி, எம்ஜிஆர் எப்படி அடுத்த தலைமுறையினருக்கு உதாரணமாக இருந்தார்களோ அதே போல் ரஜினி , கமலும் அவர்களுக்கு அடுத்த தலைமுறையினருக்கு ஒரு உந்துதலாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் கமல் நடித்த சலங்கை ஒலி திரைப்படம் எப்பேற்பட்ட வெற்றிப்படம் என்பது அனைவருக்கும் தெரியும். அது தெலுங்கில் சாகர சங்கமம் என்ற பெயரில் வெளியானது. ஒரு சமயம் பிரகாஷ்ராஜ் பெங்களூரில் இருந்தபோது அந்த படத்தை கிட்டத்தட்ட 14 முறை பார்த்திருக்கிறாராம்.
அதுவும் இடைவேளை காட்சிக்கு முந்தைய சீனில் கமல் ஒரு பத்திரிக்கையை பார்த்துவிட்டு கண்ணீர் மல்க அமர்ந்திருப்பாராம். அந்த காட்சிக்காகவே தியேட்டர் ஊழியர்களிடம் சிறப்பு சலுகை வாங்கி கொண்டு இடைவேளை நேரத்தையும் அறிந்து கொண்டு திரும்ப திரும்ப அந்த காட்சியை பார்க்க செல்வாராம் பிரகாஷ்ராஜ்.
முழுவதுமாக படத்தை 14 முறை பார்த்த பிரகாஷ்ராஜ் அந்த காட்சியை மட்டும் பார்ப்பதற்காகவே இடைவேளை நேரத்தில் பார்க்க ஆசைப்படுவாராம். அப்படி ஒரு சமயம் தன் நண்பர்களுடன் அந்த காட்சியை பார்க்க ஆசைப்பட்டு மிகவும் ஆர்வமாக ரோட்டில் கடந்து சென்றார்களாம்.
அப்போதுதான் ரோட்டை கடக்கும் போது ஜீப்ரா கிராஸிங்கில் கடக்க வேண்டும் என்று புதிய விதிமுறை வந்ததாம். ஆனால் பிரகாஷ்ராஜ் மற்றும் சில நண்பர்கள் அதை கவனிக்காமல் சென்று விட டிராஃபிக் போலிஸார் இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் போய் நிற்கவைத்துவிட்டடதாம். அது தான் முதல் முறை நான் நீதிமன்றம் போனது அதுவும் கமலுக்காக என்று ஒரு பேட்டியில் கூறினார் பிரகாஷ் ராஜ்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…