குழந்தையை பெத்த பின்பும் அழகு குறையலையே!.. சோப்பு நுரையை ஆடையாக அணிந்து போஸ் கொடுத்த பிரபல நடிகை!..

கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பிரணிதா சுபாஷ் திருமணமாகி ஒரு பெண் குழந்தைக்கு தாயாகவும் உள்ள நிலையில், பாத் டப்பில் ஆடை அணியாமல் சோப்பு நுரையை மட்டுமே அணிந்து கொண்டு குளிக்கும் போட்டோக்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

தனது கணவருடன் இந்தக் கோடை விடுமுறையை கொண்டாட தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள பிரணிதா சுபாஷ் நீரில் அமர்ந்தபடியே உணவு உண்ணும் ரெசார்ட்டில் கணவருடன் ரொமான்டிக்காக உணவு உண்ணும் புகைப்படங்களையும், தனியாக பாத் டப்பில் உச்சக்கட்ட கவர்ச்சியில் குளிக்கும் போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சூர்யாவை கார்த்திக் சுப்புராஜ் எப்படி மாத்திட்டாரு பாருங்க!.. சூர்யா 44 ஃபர்ஸ்ட் ஷாட் வீடியோ ரிலீஸ்!

குழந்தையை தனியாக விட்டுவிட்டு கணவனும் மனைவியும் மீண்டும் ஹனிமூனுக்கு கிளம்பி விட்டீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கன்னட நடிகையான பிரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

பாஜகவின் ஆதரவாளரான பிரணிதா சுபாஷ் ஆன்மீகம் குறித்த ஏகப்பட்ட பதிவுகளையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். ஆனால், ஆடையணியாமல் இப்படி கிளாமர் காட்டுவதில் மட்டும் எந்த ஒரு சடங்கையும் அவர் பார்க்க மாட்டார் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆடியோ லாஞ்சே இன்னும் வைக்கல!.. அடுத்த வாரம் ராயன் எப்படி ரிலீஸ் ஆகும்?.. தனுஷுக்கு பெரிய பல்பு!..

தனியாக பிரணிதா பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை நடத்தி வரும் நடிகை பிரணிதா கொரோனா காலத்தில் தனது அறக்கட்டளையின் மூலம் ஏகப்பட்ட மக்களுக்கு தினமும் உணவுகளை வழங்கி வந்தார். திருமண நாளை முன்னிட்டு தாய்லாந்துக்கு டூர் சென்றுள்ள பிரணிதா அங்கே கணவருடன் வேறலெவல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

31 வயதாகும் பிரணிதா இந்த ஆண்டு வெளியான மலையாள படமான தங்கமணி படத்தில் நடித்து மலையாளத் திரையுலகிலும் அறிமுகமானார். திருமணம் மற்றும் குழந்தை பேற்றிற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு படத்திலும் நடிக்காத நிலையில் இந்த ஆண்டு தங்கமணி மற்றும் கன்னடத்தில் சமீபத்தில் வெளியான பிராமண அவதாரா படத்தில் சீதையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும் சில கன்னட படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஆசையா கேட்ட இளையராஜா!. அழகா டியூன் போட்ட எம்.எஸ்.வி!. அட அந்த பட்டா!…

Related Articles
Next Story
Share it