அஜித் பட வாய்ப்பை விட்டுவிட்டேனே.. வருத்தத்தில் பிரபல நடிகர்!
தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக திகழ்ந்துவருபவர் நடிகர் அஜித். ரசிகர் மன்றமே வேண்டாம் என கூறி ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னரும், இவருடைய படங்கள் தொடர்ந்து 100 கோடிக்கும் மேல் வசூலிப்பதெல்லாம் வேற லெவல். இதனால் இவரைவைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
ஆனால் அஜித், தனக்கு ஒரு தயாரிப்பாளரை, இயக்குனரை பிடித்துவிட்டால் தொடர்ந்து அவர்களுடன் படம் பண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்படித்தான் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஏ.எம்.ரத்னத்திற்கு தொடர்ந்து 3 படங்கள் கொடுத்தார்.
அதன்பின் சத்ய ஜோதி நிறுவனத்துடன் தொடர்ந்து 2 படம். தற்போது இரண்டாவது முறையாக போனி கபூருடன் இணைந்துள்ள அவர் அடுத்த படமும் அவருக்கே கொடுப்பதாக அறிவித்துள்ளார். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வலிமை படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரோஷியும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் பிரசன்னா அஜித்தை பற்றி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். நடிகை சினேகாவின் கணவரும், நடிகருமான பிரசன்னா தல அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார். இவருக்கு வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், ஒருசில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.
இதுகுறித்து டுவிட் செய்துள்ள அவர், 'அஜித் அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருப்பதை கேட்டு சந்தோஷம் அடைந்தேன். இருந்தாலும், நான் வலிமை படத்தில் நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆனது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இனி வரும் காலத்தில் நல்ல விஷயம் ஏதேனும் நடக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்' என்றார்.