ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஓவர் அலப்பறையா இருக்கே… பிரசாந்த்55 பக்கா அப்டேட்!

prasanth
Prasanth55: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருந்த பிரசாந்தின் 55வது திரைப்படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி இருக்கிறது.
கோலிவுட்டில் தற்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் விஜய், அஜித் அறிமுகமாகும் நேரத்திலேயே வெற்றி நடிகராக இருந்தவர் பிரசாந்த். ஒரே தலைமுறை என்றாலும் பிரசாந்த் வளர்ச்சி பெரிதாக இருந்தது. ஆனால் அவருக்கு கிடைத்த புகழை அவரால் தக்க வைக்க முடியவில்லை.
இதில் அவருடைய சொந்த வாழ்க்கை வேறு பிரச்னையை கிளப்பியது. இதனால் பிரசாந்தின் திரை வாழ்க்கையே பெரிய அடி வாங்கியது. அவர் நடிப்பில் உருவான அந்தகன் படம் நகராமல் பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. பல போராட்டத்துக்கு பின்னர் கடந்த வருடம் தான் வெளியானது.

அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் வசூல் குவித்தது. தொடர்ந்து, பிரசாந்தின் அடுத்த படத்தின் வேலைகள் குறித்த எந்த வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் பிரசாந்தின் 55வது படம் குறித்து அப்டேட் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில் என்னுடைய அப்பா ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் என்ன பரிசு கொடுத்தார் என்ற கேள்வி வரும். அதுபோல இந்த முறையும் ஒரு பரிசு கொடுத்து இருக்கிறார். ரொம்பவே பெரிய பரிசு. இயக்குனர் ஹரியுடன் இணைந்து 55வது படத்தினை தந்துள்ளார்.
இந்த படம் பெரிய படமாக இருக்கும். ஆடியன்ஸ் எப்பையுமே திரைக்கதைய ஒழுங்கா பண்ணுங்க. ஸ்க்ரிப்ட்டை சரியா பண்ணுங்க எனக் கேட்பார்கள். அதுபோல இது இருக்கும். ஹரி எப்போதுமே ஸ்பீட்டான இயக்குனர். எங்களுடைய முதல் படமான தமிழ் போலவே இதுவும் இருக்கும்.

இந்த படத்தினை என்னுடைய தந்தை தியாகராஜன் தயாரிக்கிறார். அவர் எப்போதுமே பெரிதாக பிரம்மாண்டமாக தயாரிப்பார். அதனால் இப்படமும் சூப்பர் காம்போ கூட்டணியில் வரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் ஹரி தன்னுடைய முதல் படத்தில் பிரசாந்தினை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.