சினிமாவிற்கு வந்த இரண்டு ஆண்டுகளில் யாருமே செய்யாத சாதனை! லக்கி நடிகரான பிரசாந்த்

by Rohini |   ( Updated:2024-08-10 12:08:42  )
prasanth
X

prasanth

Actor Prasanth: தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இன்று அந்தகன் படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். இந்த நிலையில் பிரசாந்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. தியாகராஜன் மற்றும் சாந்தி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் பிரசாந்த்.

கல்விப் படிப்பை முடித்ததும் பிரசாந்திற்கு இரண்டு மருத்துவ கல்லூரிகளில் இருந்து வாய்ப்புகள் வந்தன. ஆனால் தன் தந்தையை போலவே தானும் ஒரு சிறந்த நடிகராக வேண்டும் என நினைத்து மருத்துவபடிப்பை புறக்கணித்தார் பிரசாந்த்.

இதையும் படிங்க: ஆல் ஏரியாவும் அண்ணன் ஏரியாதான்! ‘கோட்’ படத்தால் பெரிய சாதனை செய்யப் போகும் விஜய்

இந்தியாவில் கிராஃபிக்ஸ் சம்பந்தமான படிப்பை முடித்துவிட்டு லண்டனில் இசை சம்பந்தமான படிப்பை படித்து முடித்தார். குதிரை சவாரி செய்வது, பியானோ வாசிப்பது இவற்றில் கைதேர்ந்தவரானார் பிரசாந்த். மேலும் ஜிம்னாஸ்டிக், பரத நாட்டியம், சிலம்பம் என அத்தனை கலைகளையும் கற்றார்.

வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார் பிரசாந்த். சினிமாவிற்கு வந்த இரண்டு ஆண்டுகளில் ‘ஐ லவ் யூ’ என்ற ஹிந்தி படத்தில் நடித்தார். சினிமாவிற்குள் நுழைந்து இரண்டு வருடங்களில் பாலிவுட்டில் கால்பதித்த முதல் நடிகர் பிரசாந்த் என்ற பெருமையையும் பெற்றார்.

இதையும் படிங்க: வாலிக்கே வராத நேரத்தில் கருணாநிதி போட்ட வார்த்தைகள்… எம்ஜிஆருக்கு செம பொருத்தமா இருக்கே..!

அதன் பிறகு பாலுமகேந்திராவின் வண்ண வண்ணப் பூக்கள், மணிரத்னத்தின் திருடா திருடி, ஷங்கரின் ஜீன்ஸ் போன்ற படங்களில் நடித்து ப்ளாக் பஸ்டர் வெற்றி நாயகனாக உயர்ந்தார். ஷங்கர் போட்ட ஒரே கண்டீஷன் காரணமாக ஏழு படங்களையும் விட்டு விட்டு ஜீன்ஸ் படத்தில் நடித்துக் கொடுத்தார் பிரசாந்த்.

love

love

அதன் பிறகு சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், பிரச்சினைகளினால் அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியவில்லை. தெலுங்கில் குணச்சித்திர வேடத்திலும் நடித்தார். இருந்தாலும் அந்த பழைய பிரசாந்தை பார்க்க வேண்டும் என அவரது அப்பாவும் காத்துக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: என்னால இதெல்லாம் முடியாது… மலர் டீச்சரை அழ விட்ட படக்குழு…

அதன் விளைவுதான் அந்தகன் திரைப்படம். இந்தப் படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கோட் படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இனி பிரசாந்த் வாழ்க்கையில் ஏறுமுகம் தான் என அந்தகன் படத்தை பார்த்த பலரும் கூறி வருகிறார்கள்.

Next Story