தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக தன் பணியை திறம்பட செய்ததில் முக்கியமானவர் நடிகர் தியாகராஜன். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உட்பட மொழி படங்களிலும் தன் திறமையை நிரூபித்துள்ளார்.

இவர் பிரபல நடிகரின் பிரசாந்தின் தந்தை மற்றும் நடிகர் விக்ரமின் தாய்மாமா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சொந்தமாக வியாபாரத்தில் ஆர்வம் கொண்டிருந்த சமயத்தில் தான் எதிர்பாராதவிதமாக அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பரீட்சையமானார்.

அதன் பின் தொடர்ந்து பல படங்களில் நடித்தும் இயக்கியும் வெற்றி கண்டார். தன் மகன் பிரசாந்தின் கெரியரை வழி நடத்துவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறார். அண்மையில் பிரசாந்த் நடிப்பில் உருவான அந்தகன் படத்தை கூட இவர் தான் தயாரிக்கிறார். அந்த படத்தில் யோகிபாபு, ஊர்வசி போன்ற நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தை பற்றி பேசுகையில் தியாகராஜன் படம் முடிந்து நடித்த பிரபலங்களுக்கு எல்லாம் பணம் செட்டில் பண்ணும் சமயத்தில் ஊர்வசிக்கும் சம்பளத்தை அனுப்பியுள்ளார். படத்திற்கு டப்பிங் பேச வரும் போது பூஜை போட்டு தான் டப்பிங் ஆரம்பிப்பாராம். அந்த சமயத்தில் ஊர்வசி வாங்கிய சம்பளத்தை அப்படியே கொடுத்து விட்டாராம். இவர் எவ்ளோ சொல்லியும் ஊர்வசி கேட்கவில்லையாம். எனக்கு ஏற்கெனவே நிறைய சம்பளம் கொடுத்திட்டீர்கள். இது வேண்டாம் என கூறினாராம். இப்படியும் ஒரு பெண்மணியா? என்று நினைத்து இரவு முழுவதும் அப்செட்டில் இருந்ததாகவும் சில நேரங்களில் கண் கலங்கியதாகவும் தெரிவித்தார்.





