‘வின்னர்’ படத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள்!.. பிரசாந்த் ஃபீல்டுஅவுட் ஆனதுக்கு காரணமே இதுதான்!..

by Rohini |   ( Updated:2023-04-15 01:09:59  )
prasanth
X

prasanth

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இப்ப இருக்கிற விஜய், அஜித் இவர்களுக்குண்டான மார்கெட்டை அப்பவே நிலை நிறுத்திக் கொண்டவர் பிரசாந்த். அந்த அளவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை தன்னுள் அடக்கியவர்.

படங்களின் மூலம் ஈர்த்தவர்

விஜய், அஜித் வளர்ந்து வந்த சமயத்தில் பீக்கில் இருந்தார் பிரசாந்த். அந்த நேரங்களில் ஸ்டார், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, போன்ற சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்து வந்ததால் பிரசாந்திற்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே வந்தது.

வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பிரசாந்த். கோலிவுட்டின் மிக ஸ்டைலிஷான நடிகராக 90’ஸ் காலத்தில் வலம் வந்தார். அப்பவே மணிரத்னம், சங்கர் போன்ற மாபெரும் இயக்குனர்களின் படங்களை நடித்து வெற்றி நடை போட்டார். மக்களின் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.

அப்பவே அந்தப் பட்டம்

விஜய், அஜித்துக்கு எப்படி இளைய தளபதி,அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டங்களை கொடுத்து கொண்டாடுகிறார்களோ அவர்களுக்கு முன்பாகவே ‘டாப் ஸ்டார்’ என்ற பட்டத்தை பெற்று கெத்து காட்டியவர் பிரசாந்த். தொடர்ந்து மக்கள் ஆதரவை பெற்று வந்த பிரசாந்த்திற்கு யார் கண் பட்டதோ திடீரென வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

பரிதாப நிலை

டாப் ஸ்டாராக பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த பிரசாந்த் ராம் சரண் நடித்த வினய விதேய ராமா என்ற படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பிரசாந்தை பார்த்து தமிழ் ரசிகர்கள் கண்ணீர்தான் வடிக்கவில்லை. பிரசாந்திற்கா இந்த நிலைமை என உச்ச் கொட்ட தோன்றியது.

மீண்டும் தன் மகனை பழைய பிரசாந்தாக மாற்றுவதற்கு அவரது தந்தை தியாகராஜன் பல வழிகளை மேற்கொண்டார். அதன் காரணமாகத்தான் அந்தகன் படத்தை எடுத்தார், ஆனாலும் அந்தப் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கின்றது.

வின்னர் படத்தில் பிரச்சினை

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்த படம் தான் வின்னர். இந்தப் படத்தில் பிரசாந்திற்கு ஜோடியாக நடிகை கிரண் நடித்தார். வடிவேலுவின் காமெடி அந்த படத்தில் மிகப்பெரிய ப்ளஸ். ஆனால் இந்தப் படத்தில் நடிக்கும் போது பிரசாந்திற்கு ஏதோ சம்பளப்பிரச்சினை இருந்ததாம். ஆனால் ஒரு பெரிய ஹீரோ என்ற முறையில்
அவரே சமாளிச்சிருக்கலாம்.

ஆனால் அவர் தந்தையிடம் வந்து சொல்ல அவர் அப்பாவோ சம்பளத்தை கொடுத்தால் தான் பிரசாந்த் நடிப்பான் என்று சொல்லி அந்தப் படம் வெளியாகும் வரை பெரிய பிரச்சினை எல்லாம் வந்ததாம். இதே போல் தான் பிரசாந்தின் விஷயங்களில் தியாகராஜன் தலையீடு அதிகமாக இருக்குமாம். சொல்லப் போனால் பிரசாந்தின் ஃபீல்டுஅவுட்டிற்கு அதுவும் ஒரு காரணமாகக் கூட இருக்கலாம் என இந்த செய்தியை கூறிய வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : இவ்ளோ அழகா இருந்தா என்ன பண்றது?.. பெண்களை கொள்ளை கொண்ட தமிழ் நடிகர்களின் பட்டியல்!..

Next Story