கமலுக்கு அடுத்தப்படியாக டெக்னாலஜியை கரைச்சு குடித்த நடிகர்!.. பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் மனம் கவர்ந்த ஹீரோ..
தமிழ் சினிமாவில் மூத்த நாயகனாக இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருப்பவர் நடிகரும் உலக நாயகனுமான கமல்ஹாசன். தன்னுடைய 60 ஆண்டு சினிமா அனுபவத்தால் ஒட்டுமொத்த உலக சினிமாவையும் உற்று நோக்கக் கூடிய அளவில் திறமை வாய்ந்தவராக விளங்குகிறார்.
நடிகர்களில் இவர் ஒருத்தரே சினிமா பற்றிய தற்கால அறிவை அவ்வப்போது பெற்றும் வருகிறார். ஹாலிவுட்டில் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அதை முன்கூட்டியே பார்த்து எந்த மாதிரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றனர் என்பதை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடக் கூடிய மனிதர்.
அதுமட்டுமில்லாமல் அந்த தொழில்நுட்பத்தை தமிழ் சினிமாவிலும் அறிமுகப் படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் அதற்கான வேலைகளில் உடனுக்குடன் இறங்குபவர் கமல். மேலும் தன்னுடைய படங்களில் பெரும்பாலும் டெக்னாலஜி சம்பந்தமான காட்சிகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்.
இப்படி சினிமாவை பற்றி வரும் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து வைப்பதில் கமலுக்கு அடுத்தப்படியாக இருக்கும் ஒரே நடிகரை பற்றி மறைந்த எழுத்தாளரான சுஜாதா அவரது வாரப்பத்திரிக்கையில் குறிப்பிட்டிருந்தார். ஒரு சமயம் அவரது பத்திரிக்கையில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஒரு வாசகர் கமலுக்கு அடுத்தப் படியாக எந்த நடிகரை நீங்கள் குறிப்பிடுவீர்கள் என்று கேட்க,
அதற்கு பதிலளித்த சுஜாதா நடிகர் கார்த்திக்கை தான் சொல்வேன். அனைவரையும் வசீகரிக்கும் தோற்றம், அதிக ரசிகர்கள் பலம் கொண்ட நடிகர் என்ற வகையில் கூறினாலும் தொடர்ந்து பல ப்ளாப் படங்கள் மட்டும் கொடுக்காமல் இருந்திருந்தால் அவரைத் தான் குறிப்பிட்டிருப்பேன்,
ஆனால் டெக்னாலஜியோடு தொடர்பு படுத்தி பார்த்தால் நடிகர் பிரசாந்த் தான் என்று சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். ஒரு காலத்தில் இணைய வசதி இல்லாத சமயத்திலும் அப்போதெல்லாம் ஜிமெயில் அறிமுகம் ஆன நேரம். அந்த நேரத்தில் பிரசாந்த் பேட்டி எடுக்க வரும் பத்திர்க்கையாளர்களுக்கு தனித்தனியாக மெயில் ஐடி உருவாக்கி கொடுப்பாராம். மேலும் வருங்காலத்தில் இது தான் பெரிதாக பேசப்படும் என்றும் கூறுவாராம்.
இதையும் படிங்க : சிம்பு அப்படி செஞ்சதுல எந்த தப்பும் இல்லை… பிள்ளைக்கு சப்போர்ட்டுக்கு வரும் டி.ஆர்… அப்பான்னா இப்படில இருக்கனும்!!
எப்போதும் சிறிய அளவிலான டேப்லெட் மாதிரி ஒரு கணிப்பொறியை வைத்து சுற்றிக் கொண்டிருப்பாராம். என்ன என்ன தகவல் தொழில் நுட்பம் வந்திருக்கிறது என்று சினிமா பற்றிய தன் அறிவை பெருக்கிக் கொள்வாராம் பிரசாந்த். கமல் அளவுக்கு இல்லைனாலும் நடிகர்களில் கமலுக்கு அடுத்தப் படியாக சினிமா பற்றிய புது புது தொழில்நுட்பத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் பிரசாந்திற்கு ஆரம்பகாலத்தில் இருந்தே இருந்திருக்கின்றதாம். இந்த தகவலை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.