Actor Prasanth: தமிழ் சினிமாவில் 90களில் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் பிரசாந்த். இவருக்கு டாப் ஸ்டார் என்ற இன்னொரு பெயரும் உண்டு. அந்த காலத்தில் அஜித், விஜயை பின்னுக்கு தள்ளி ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருந்தார் பிரசாந்த். கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து மிகவும் பிஸியான நடிகராகவே இருந்து வந்தார்.
பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகராக இருந்து வந்த பிரசாந்த் தொடர்ந்து காதல் கதைகளை மையப்படுத்தி அமைந்த படங்களில் நடித்து ஒட்டுமொத்த பெண் ரசிகைகளை தன் வசம் கொண்டார். அதன் பிறகு இடையில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சிறிது ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.
இதையும் படிங்க: பிரபுவுக்கு பிடிக்காத கதை!.. விஜயகாந்துக்கு முதல் ஹிட் படம்!.. கேப்டன் ஹீரோவா உருவாகிய அந்த தருணம்!..
இப்போது மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்து இருக்கிறார். தற்போது விஜயுடன் சேர்ந்து கோட் படத்தில் பிரசாந்தும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரின் ஒரு பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதாவது சினிமா துறையில் VFX என்ற ஒரு தொழில்நுட்பம் இருக்கின்றது. கிராபிக்ஸை மையப்படுத்தி படங்களில் சிஜி வேலைகளை செய்யும் தொழில்நுட்பம் தான் இது.
இந்த VFXல் முதல் டைரக்டர் நான் தான். அதுவும் இந்திய சினிமாவிலேயே நான்தான் முதன் முதலில் VFX டைரக்டர் என்பதை அந்த பேட்டியில் பிரசாந்த் கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் முதன்முதலில் இந்தியாவிலேயே இவருடைய ஒரு படத்தில் தான் சிஜி வேலை அறிமுகமானதாம். அதுவும் ‘ஆணழகன்’ என்ற திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் அந்த சிஜி வேலைகளை பயன்படுத்தி காட்சிகளை படமாக்கினார்களாம். இதுதான் முதன் முதலில் சிஜி வேலை பயன்படுத்தி எடுக்கப்பட்ட முதல் படம் என பிரசாந்த் அந்த பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க: அட இது அந்த படம்ல!.. வெளியே கசிந்த ராயன் படத்தின் கதை.. சரியா வருமா?!..
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…
Viduthalai 2:…
விடுதலை 2…