Categories: Cinema News latest news

கேஜிஎஃப் 3 இது கன்பார்ம்.. ஆனா இது சந்தேகம்தான்.. டிவிஸ்டு வச்ச பிரசாந்த் நீல்..

KGF3: ஃபேன் இந்தியா படத்துக்கே தனி அடையாளத்தினை உருவாக்கிய திரைப்படம் கேஜிஎஃப். இப்படம் இரண்டு பாகங்கள் முடிந்து இருக்கும் நிலையில் தற்போது மூன்றாம் பாகத்துக்கான முக்கிய அப்டேட்டை இயக்குனர் பிரசாந்த் நீல் வெளியிட்டு இருக்கிறார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்திருந்த திரைப்படம் கேஜிஎஃப். இப்படத்தின் முதல் பாகத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ரொம்பவே சிம்பிள்ளான கதை என்றாலும் ஹீரோவின் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளால் படம் அசூர வரவேற்பு கிடைத்தது. இதனால் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பு இருந்தது.

இதையும் படிங்க:ஆமா அவள நம்பி ஏமாந்துட்டேன்!.. காதலி மீது காண்டான பப்லு பிரித்திவிராஜ்!. அப்ப அது உண்மைதான் போல!..

இதையடுத்து 2022ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாள உள்பட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு திரைக்கு வந்தது. எதிர்பார்ப்பை எக்கசக்கமாக பூர்த்தி செய்து படம் சூப்பர்டூப்பர் ஹிட் அடித்தது. மிகப்பெரிய வசூல் சாதனையையும் படைத்தது.

இரண்டாம் பாகத்திலேயே மூன்றாம் பாகத்துக்கான ட்விஸ்ட்டை படத்தினை இயக்குனர் பிரசாந்த் நீல் வைத்து இருந்தார். இதனால் ரசிகர்களும் எப்போ எப்போ என காத்திருக்கின்றனர். தற்போது யாஷ், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: எம்ஜிஆரை கிண்டலடித்த சந்திரபாபு.. அந்த ஆணவத்துக்கு புரட்சி தலைவர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?…பிரசாந்த் நீல் சலார் படத்தினை இயக்கி இருக்கிறார். இதனால் கேஜிஎஃப் மூன்றாம் பாகம் லேட்டாகுமா என ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இதனை சரி செய்யும் விதமா பிரசாந்த் நீல்லே ஒரு அப்டேட்டை கொடுத்து இருக்கிறார். அதில் கேஜிஎஃப் மூன்றாம் பாகம் கண்டிப்பாக திரைக்கு வரும்.

ஆனால் அந்த படத்தினை நான் இயக்குவேனா என்பது தான் சந்தேகமே. படத்தில் கண்டிப்பாக யாஷ் நடிப்பார். அவர் ரொம்பவே பொறுப்பானவர். வெறும் விளம்பரத்துக்காக எதையுமே செய்யமாட்டார். ‘கேஜிஎஃப்’ மூன்றாம் பாகத்தின் கதை கூட தயார். வெளியீட்டுக்கு முன் கதை ரெடியாக இருக்க வேண்டும் என்பது எங்க டீமின் ஐடியா என பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார்.

Published by
Akhilan