Categories: Cinema News latest news

நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி!…இப்ப உள்ள நடிகர்களுக்கு அது கிடைக்காது!…பிரசாந்த் சொல்வது என்ன?!…

தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகர்களில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்திருந்தவர் நடிகர் பிரசாந்த். இன்றைய காலகட்டத்தில் ஒட்டுமொத்த சினிமாவும் தல, தளபதி என கொண்டாடும் அஜித், விஜய் ஆகியோர் ஆரம்பகாலத்தில் பிரசாந்திற்கு பின்னாடி இருந்தவர்கள் என்று தான் கூறுவார்கள்.

Also Read

தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்து சுற்றி கொண்டிருந்தவர். பெண் ரசிகைகளில் தொடங்கி நடிகைகள் வரை அனைவரின் காதல் மன்னனாக வலம் வந்தவர். அழகான தோற்றம், கட்டு மஸ்தான உடம்பு, வெளிர் நிறம் என அனைத்து அம்சங்களும் பொருந்தி இருந்த ஆணழகன் என்றே கூறலாம்.

டாப் இயக்குநர்களான பாலு மகேந்திரா, மணிரத்னம், சங்கர் போன்றவர்களின் திரைப்படங்களின் நடித்தார். 2000ம் ஆண்டுக்கு பின்னர் இடைவெளிவிட்ட பிரசாந்த் பொன்னர் சங்கர் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். கடைசியாக வெளியான மம்பட்டியான் உள்ளிட்ட அவரது படங்கள் பெரிதாக ஹிட் அடிக்காததால், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில் அந்த கால நினைவுகளை ரசிகர்களுக்காக பகிர்ந்த பிரசாந்த் “ இப்பொழுதெல்லாம் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்கள் இருக்கின்றன. ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு லெட்டர் தான் வரும். அந்த லெட்டரை திறந்து பார்த்தாலே ஒவ்வொரு வரியும் கலர் கலரா பார்க்கவே நம்மை இழுக்கும். எனக்கு அவ்ளோ கடிதங்கள் வந்தன. நான் அனுபவித்ததெல்லாம் இப்ப உள்ள நடிகர்களுக்கெல்லாம் கிடைக்காது. அது ஒரு காலம் “ என அந்த கால நினைவுகளை அழகாக பகிர்ந்தார்.

Published by
Rohini