நாங்க ரெண்டு பேர் சேர்ந்தா வானவெடி தான்...! பிரசாந்தின் கெத்தான பேச்சு..
20 வருடங்கள் முன் ரொமாண்டிக் pair என்று ரசிகர்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டவர்கள் நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை சிம்ரன். நீண்ட இடைவெளிக்கு பிறகு மறுபடியும் இவர்களை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் நடிக்கும் அந்தகன் படத்தின் மூலம்.
இந்த படத்தில் இவர்கள் மட்டுமில்லாமல் நடிகை பிரியா ஆனந்த், வனிதா விஜயகுமார், சமுத்திரக்கனி, யோகிபாபு என பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படமாக இது அமைய இருக்கிறது. இந்த படம் காமெடி கலந்த க்ரைம் திரில்லிங் படமாக வருகிறது. தியாகராஜன் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
ஆரம்பகாலங்களில் இவர்கள் சேர்ந்து நடித்த படங்கள் எல்லாம் கல்லூரி மாணவர்களை ஏதோ ஒரு ஃபீலிங்கில் கொண்டு போய் சேர்ந்து விடும். அந்த அளவுக்கு காதலை வெளிப்படுத்தியிருக்கும். காதல் பண்ணாதவர்களை கூட பண்ணவைக்கும். இவர்களை பேட்டி கண்ட போது மிகவும் ஜாலியாகவும் எதார்த்தமாகவும் பேசினார்கள்.
அந்த பேட்டியில் பிரசாந்த் ரொம்ப நாள்கள் கழித்து நடிக்கிறோம். நானும் சிம்ரனும் சேர்ந்து வந்தாலே ரசிகர்களுக்கு வானவெடி தான். படத்தை ரொம்ப எதிர்பார்க்கலாம் என கெத்தா கூறினார்.