பூஜா ஹெக்டே, கயாடு லோஹரை விடுங்க!.. பிரசாந்த் உடன் ஜோடியா இப்போ யாரு இருக்காங்கனு பாருங்க!..

நடிகர் பிரசாந்த் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகை ஆலியா மானசா நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட வீடியோ தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மூத்த நடிகர் தியாகராஜன் அவர்களின் மகனான நடிகர் பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் ஆணழகன், கல்லூரி வாசல், ஜீன்ஸ், குட்லக், சாக்லேட், ஸ்டார்,வின்னர், ஆயுதம், லண்டன் போன்ற பல படங்களில் நடித்த பிரசாந்த் சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

அதையடுத்து பொன்னர் சங்கர் மற்றும் மம்பட்டியான் படங்களின் மூலம் கம்பேக் கொடுத்த பிரசாந்திற்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், பிரசாந்த் தளபதி விஜயுடன் நடித்திருந்த கோட் படம் மற்றும் அந்தகன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அவருகு பெற்றுத்தந்தது. இதை தொடர்ந்து பிரசாந்த் பல வெற்றி படங்களை கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆலியா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜாராணி தொடரில் செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலாமனார். அந்த சீரியலில் அவருடன் நடித்த நடிகர் சஞ்சீவையே காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் பிறந்தனர். ஆலியா மானசா தொடர்ந்து பல விளம்பரங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் நடிப்பதன் மூலம் தினமும் அனைவரின் மனதில் பதிந்துவிட்டேன் இந்த உணர்வு படங்களின் நடிப்பதன் மூலம் கிடைக்காது என கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகை ஆலியா மானசா சேர்ந்து ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ப்ளு கலர் சேலையில் ஆலியா கையை மாற்றி மாற்றி வைத்து கியுட்டாக போஸ் கொடுப்பதை பார்த்த ரசிகர்கள் கையிலேயே வித்த காட்றாங்கப்பா என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரசாந்த் அடுத்த்தாக ஹரி இயக்கத்தில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டே மற்றும் கயாடு லோஹர் உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்.