Cinema News
தளபதி 68-ல் இரண்டு டாப் நடிகர்கள்!.. எப்பா வெங்கட் பிரபு என்னதான் பிளானு!…
Thalapathy 68: லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என சொல்லப்படுகிறது.
இரட்டை வேடம் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக விஜய், வெங்கட்பிரபு ஆகியோ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளனர். அங்கு, அவதார் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களுக்கு VFX செய்த நிறுவனத்தில் விஜய்க்கு சில சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகைப்படமும் வெளியானது.
இதையும் படிங்க: விஜய் மீது ஓவர் பாசத்தில் சீமான்… ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்திய தளபதி! அண்ணன இப்டி கேட்டுப்புட்டியேப்பா!
அதேபோல்,equalizer 3 படத்தை விஜய் என்ஜாய் பண்ணி பார்த்த ஃபேன் பாய் மொமண்டையும் வெங்கட்பிரபு சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விஜய் ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். ஒருபக்கம் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பற்றிய தகவல் நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்து வருகிறது.
முதலில் விஜய்க்கு தம்பியாக ஜெய் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. அதன்பின் ஜோதிகாவும், பிரியங்கா மோகனும் நடிக்கிறார்கள் என சொல்லப்பட்டது. அதன்பின் விஜய்க்கு அம்மாவாக நடிக்க ஜோதிகா மறுத்துவிட்டதால், சிம்ரனை நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியானது.
இதையும் படிங்க: அஜித் சொன்னதால்தான் வெங்கட் பிரபுவுடன் இணைந்தாரா விஜய்?.. தெய்வ வாக்கு தல!…
ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்டதால் அவருக்கு பதில் சினேகா நடிப்பதாக கடைசியாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் பிரசாந்த் மற்றும் பிரபு தேவா இருவரும் நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. பிரசாந்த் விஜய்க்கு முன்பே சினிமாவுக்கு முன்பே ஸ்டாராக இருந்தவர். அவர் எப்படி இதில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது தெரியவில்லை.
மொத்தத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே இது உண்மையா என்பது தெரியவரும்.
இதையும் படிங்க: சன் டிவிக்கு விஜய் மீது அப்படியென்ன காண்டு!.. கொந்தளிக்கும் ரசிகர்கள்.. என்ன ஆச்சு தெரியுமா?