2வது நாளில் 2 மடங்கு வசூல்!.. பாக்ஸ் ஆபிசில் இறங்கி அடிக்கும் அந்தகன்!....
Anthagan: பல வருடங்களுக்கு பின் பிரசாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் அந்தகன். ஹிந்தியில் ஹிட் அடித்து பாராட்டை பெற்ற அந்தாதூண் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் இது. இந்த படம் 3 வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்டது. ஆனால், பல காரணங்களால் தடை பட்டு இப்போதுதான் வெளியாகியிருக்கிற்து.
வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரசாந்த் அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் காதல் இளவரசனாக வலம் வந்தார். பல ஹிட் படங்களையும் கொடுத்தார். ஆனால், திருமண வாழ்வில் ஏற்பட்ட தோல்வியில் மனமுடைந்து போன பிரசாந்த் பல வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.
இதனால், அவரின் மார்க்கெட் சரிந்து போனது. எல்லோருக்கும் பிடித்த நடிகராக இருந்தும் அவரை அதிக படங்களில் பார்க்க முடியவில்லை. விஜயின் கோட் படத்தில் நடித்திருந்தாலும் அதில் ஹீரோ என்னவோ விஜய்தான். இந்த நிலையில்தான் அந்தகன் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் வெளியானது. படம் வெளியான அன்றே இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. அதற்கு எல்லோருக்கும் பிடித்தமான நடிகராக பிரசாந்த் இருப்பதுதான்.
முதல் நாளில் 65 லட்சம் வசூல் செய்ததாக சொல்லப்பட்ட நிலையில் 2 நாட்கள் முடிந்துள்ள நிலையில் அந்தகன் திரைப்படம் 2 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது முதல் நாள் வசூலை ஒப்பிடும்போது 2ம் நாளில் 2 மடங்கு வசூல் அதிகரித்திருக்கிறது.
இந்த படம் தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் ஆகியோருக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என கணிக்கப்படுகிறது. பல வருடங்களுக்கு பின் தனக்கு வெற்றி கிடைத்திருப்பது பிரசாந்துக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.