ரேஸ் குதிரையாக சினிமாவுக்குள் நுழைந்த பிரசாந்த்… ஜாக்பாட் அடித்து சம்பாதித்த நபர்கள்… அடேங்கப்பா!

Published on: February 22, 2023
Prashanth
---Advertisement---

1990களில் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வந்த பிரசாந்த், ரசிகர்கள் மத்தியில் டாப் ஸ்டார் என்ற பெயரையும் பெற்றார். மேலும் அன்றைய இளம் பெண்களின் கனவுக் கண்ணனாகவும் திகழ்ந்து வந்தார்.

 Prashanth
Prashanth

அஜித். விஜய் ஆகியோர் வளர்ந்து வந்த காலகட்டத்திலேயே பிரசாந்த் தனக்கென தனி ரூட் பிடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். எனினும் சமீப ஆண்டுகளாக பிரசாந்தின் கேரியர் சரிவை கண்டது. சமீப காலமாக வெளிவந்த பல திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை.

பிரசாந்த் தற்போது “அந்தகன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். அதே போல் இத்திரைப்படத்தின் மூலம் பிரசாந்த் கம்பேக் கொடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 Prashanth
Prashanth

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தனது வீடியோ ஒன்றில் பிரசாந்த்தின் முதல் திரைப்படமான “வைகாசி பொறந்தாச்சு” குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

“ரசிகர்களிடையே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மிகப் பெரிய ஸ்டார் ஆனவர் பிரசாந்த். அவர் முதல் படமான வைகாசி பொறந்தாச்சு உருவாகும்போது அவ்வளவு பெரிய வெற்றிப்படமாக அது அமையும் என யாரும் கணிக்கவே இல்லை. ஆங்கிலத்தில் பிளாக் ஹார்ஸ் என்று சொல்வார்கள். அது போல் யாராலையும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத வெற்றியை அந்த படம் தனக்குள் வைத்துக்கொண்டிருந்தது” என அந்த வீடியோவில் சித்ரா லட்சுமணன் கூறியிருந்தார்.

Vaigasi Poranthachu
Vaigasi Poranthachu

மேலும் பேசிய அவர் “வைகாசி பொறந்தாச்சு படம் வெளியானதும் தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது. அந்த படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்கு நிர்வாகிகள், திரையரங்கில் கேன்ட்டின் வைத்திருந்தவர்கள், திரையரங்கில் சைக்கிள் ஸ்டான்ட் வைத்திருந்தவர்கள் என அத்திரைப்படத்தின் மூலம் சம்பாதிக்காதவர்களே கிடையாது. எல்லாரும் அப்படி சம்பாதிக்கிற படமாக பிரசாந்த்தின் முதல் படம் அமைந்தது” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “எல்லாரையும் கொன்னுடுவேன்”… ஸ்டூடியோவுக்குள் புகுந்து இயக்குனரை மிரட்டிய சிவக்குமார்… இவரா இப்படி!