வாழ்க்கை ஒரு வட்டம்டா!.. மறுபடியும் வருவேன்!.. விஜய் வசனம் பேசி அதிர வைத்த பிரசாந்த்!...
Anthagan: தமிழில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்தவர் தியாகராஜன். 80களில் டெரர் வில்லனாகவும் வலம் வந்தவர். ஆனால், அவருக்கு இப்படி ஒரு அழகான மகன் இருப்பார் என திரையுலகினரே எதிர்பார்க்கவில்லை. தியாகராஜனுக்கு பிரசாந்த் என்கிற அழகான மகன் இருக்கிறான் என எல்லோரிடமும் சொன்னவே நடிகர் சத்தியராஜுதான்.
அதன்பின் எல்லோரும் தியாகராஜனை நச்சரிக்க வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரசாந்தை அறிமுகம் செய்து வைத்தார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து பிரசாந்துக்கு ரசிகர் கூட்டமும் உருவானது. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார்.
காதல் படங்களில் தொடர்ந்து நடித்து காதல் இளவரசன் என்கிற பட்டத்தையும் பெற்றார். ஆனால், அவரின் திருமண வாழ்க்கை அவருக்கு பேரதிர்ச்சியை கொண்டு வந்தது. அதன்பின் சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இதற்கிடையில் விஜய், அஜித் ஆகியோர் வந்துவிட்டனர்.
எனவே, பிரசாந்தை அதிக படங்களில் பார்க்க முடியவில்லை. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வின்னர் படம் மட்டும் ஹிட் அடித்தது. அப்பா தியாகராஜா இயக்கத்தில் சில படங்களில் நடித்தார். ஆனால், வொர்க் அவுட் ஆகவில்லை. இப்போது கோட் படத்தில் விஜயின் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.
சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பது என்பது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. வருடங்கள் போய்விட்டால் ரசிகர்களும், திரையுலகினரும் மறந்துவிடுவார்கள். ஆனால், பிரசாந்த் ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான அந்தகன் திரைப்படம் வெற்றியை பெற்றிருக்கிறது. எனவே, தியேட்டர்களுக்கு போய் ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார்.
அந்தவகையில் சென்னை கமலா தியேட்டருக்கு சென்றபோது ரசிகர்கள் முன் பேசிய பிரசாந்த்‘ மீண்டும் கமலா தியேடருக்கு வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. வைகாசி பொறந்தாச்சி படம் வெளிவந்த போது இந்த தியேட்டரில்தான் என் முகத்தை பெரிதாக திரையில் பார்த்தேன். இப்போது மீண்டும் அந்தகன் படத்தை பார்க்க வந்துள்ளேன். வாழ்க்கை ஒரு வட்டம்’ என நெகிழ்ந்து பேசினார்.