பிரபாஸுடன் மீண்டும் இணையும் பிரசாந்த் நீல்!. பட் இது சலார் 2 இல்லையாம்!..

Prashanth neel: கேஜிஎப், கேஜிஎப் 2 ஆகிய படங்களுக்கு பின் இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகியிருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் படங்களை உருவாக்கும் விதமே வேறு மாதிரி இருக்கிறது. ஏனெனில் ஒரு வித்தியாசமான உலகத்தை அவர் ரசிகர்களுக்கு காட்டுகிறார். அது முழுக்க முழுக்க பிரசாந்த் நீலின் கற்பனை என்றாலும் இப்படி ஒரு உலகம் இருந்திருக்குமா என பலரையும் யோசிக்க வைத்திருப்பதுதான் அவரின் வெற்றி.
கர்நாடகாவில் உள்ள தங்க வயல் சுரங்கம் தொடர்பான கதையை வைத்து தனது கேஜிஎப், கேஜிஎப் 2 ஆகிய படங்களை உருவாக்கி இருந்தார். இதுவரைக்கும் மாஸ் ஹீரோக்களின் படங்களில் சில பில்டப் காட்சிகளை ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால், ஒரு முழுப்படத்திலும் பில்டப் காட்சிகளை வைத்து அதை ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுக்கிறார் பிரசாந்த் நீல். அதுதான் அவரின் ஸ்டைல்.
இதையும் படிங்க: கேப்டன் மில்லரில் நீ செஞ்சதே போதுமப்பா!… கோட் ஒளிப்பதிவாளரிடம் முட்டிக்கொள்ளும் வெங்கட்பிரபு
கேஜிஎப் 2 படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி 300 கோடிக்கும் மேல் செய்து சாதனை படைத்தது. அதன்பின், பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கினார் பிரசாந்த் நீல். இந்த படத்தில் பிரித்திவிராஜ், ஸ்ரேயா ரெட்டி, ஸ்ருதி ஹாசன், ஈஸ்வரி ராவ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி இப்படம் 4 மொழிகளிலும் வெளியாகி நல்லை வசூலை பெற்றது. 270 கோடியில் உருவான இந்த திரைப்படம் உலக அளவில் ரூ.550 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. அடுத்து பிரசாந்த் நீல் கேஜிஎப் 3 அல்லது சலார் 2 என இதில் ஒன்றை எடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் சூர்யாவின் பாலிவுட் திரைப்படம்… ஹீரோயின் யாருங்கிறது தான் ஹைலைட்டே!… வெவரம் பாஸ் நீங்க
ஆனால், திடீர் டிவிஸ்டாக பிரபாஸை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் பெயர் ராவணம் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் தெலுங்கில் பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வரும் தில்ராஜு தயாரிக்கவுள்ளாராம்.
தில் ராஜு தமிழில் விஜயை வைத்து வாரிசு படத்தை தயாரித்தவர். இவர்தான் ‘விஜய்தான் சூப்பர்ஸ்டார்’ என முதலில் கொளுத்தி போட்டவர். மேலும், ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கும் தயாரிப்பாளர் இவர்தான்.
இதையும் படிங்க: கலைஞர் கைவிட்டார்.. நண்பன் விஜயகாந்துதான் காப்பாத்தினான்!.. பகீர் தகவலை சொல்லும் தியாகு..