கோட் படத்தில் நடித்த பிரசாந்துக்கு இத்தனை கோடி சம்பளமா?.. நம்பவே முடியலயேப்பா!...
இயக்குனர் மற்றும் நடிகர் தியாகராஜனின் மகன் பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சி திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். நல்ல உயரம், அழகு என ரசிகர்களை கவர்ந்தார். இவரின் முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்தார்.
ஆர்.கே.செல்வணியின் இயக்கத்தில் செம்பருத்தி, பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வண்ண வண்ன பூக்கள், மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா, ஷங்கரின் இயக்கத்தில் ஜீன்ஸ் என அடித்து விளையாடினார். இவருக்கென பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. இப்போதும் இருக்கிறது. 80 கிட்ஸ்கள் பலரும் இப்போதும் பிரசாந்தின் ரசிகர்களாக இருக்கிறார்கள்.
90களில் பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரசாந்த் சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவிலிருந்து விலகி இருந்தார். அவர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தது. ஒரு பக்கம் விஜய், அஜித், சிம்பு, தனுஷ் போன்ற ஹீரோக்கள் வந்துவிட்டதால் பிரசாந்த் காணாமல் போனார். அவ்வப்போது பிரசாந்தின் நடிப்பில் ஒரு படம் வெளியாகும்.
சுந்தர் சியின் இயக்கத்தில் வடிவேலுவுடன் இணைந்து பிரசாந்த் நடித்து வெளியான வின்னர் திரைப்படம் காமெடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தது. அதன்பின் சில படங்களில் நடித்தார் பிரசாந்த். கலைஞரின் கதை, வசனத்தில் பொன்னர் சங்கர் படத்தில் நடித்தார். அந்த படம் ஓடவில்லை.
அவரின் அப்பா தியாகராஜன் நடித்து ஹிட் அடித்த மலையூர் மம்மட்டியான் படத்தை ரீமேக் செய்து நடித்தார். நடிப்பு, நடனம், சண்டைக்காட்சி என எல்லாவற்றிலும் திறமை கொண்ட பிரசாந்த் எப்படி வாய்ப்புகளை இழந்தார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
இப்போது கோட் படத்தில் விஜயின் நண்பர்களில் ஒருவராக பிரசாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் நடித்ததற்கு பிரசாந்துக்கு 15 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என சொல்கிறார்கள் சினிமா பத்திரிக்கையாளர்கள்.