அப்படிப்போடு… பிரசாந்துக்கு பொண்ணு ரெடி.. திருமண தேதி எப்போ தெரியுமா?
நடிகர் பிரசாந்துக்கு ஏற்கனவே முதல் திருமணம் பிரச்னையில் முடிந்த நிலையில் இரண்டாம் திருமணம் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் விஜய், அஜித்துக்கு முன்பே நடிகராக எண்ட்ரி கொடுத்தவர் பிரசாந்த். வெற்றி நாயகனாக வலம்வந்தவர் திடீரென சறுக்கினார். இதற்கு அவரின் சொந்த வாழ்க்கையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. பல வருட இடைவேளைக்கு பின்னர் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் படம் ரிலீஸ் ஆனது.
இதையும் படிங்க: ‘கோட்’ படத்தில் அந்த நாலு பேருக்கு லீடர் இவரா? சத்தியமா கேப்டன் இல்லங்க
யாரும் எதிர்பார்க்காத அளவு படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய அளவு வரவேற்பை பெற்றது. 2024ம் ஆண்டின் ஹிட் லிஸ்ட்டிலும் இப்படம் இடம்பெற்றது. மீண்டும் சினிமா வாழ்க்கையை பிரசாந்த் மீட்டு எடுத்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
இதனால் அவர் திருமண வாழ்க்கையை சரி செய்ய நடிகர் தியாகராஜன் மற்றும் அவர் மனைவி நெருக்கமான வட்டாரத்தில் பெண் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் விரைவில் பெண் முடிவெடுக்கப்பட்டு திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மொத்த படத்துக்கே ஆறுதானா? தளபதியையே வச்சு செய்த படக்குழு… இதான் விஷயம்…
இருந்தும், பிரசாந்த் அவர் மனைவியுடன் சேர வேண்டும் என்றே தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். ஆனால், கிரஹலட்சுமி கண்டிப்பாக தனக்கு விவாகரத்து வேண்டும் எனக் கேட்கவே இருவரும் பிரிந்துவிட்டனர். சினிமா வாழ்க்கை சற்று ஏற்றம் கண்டு இருக்கும் நிலையில் சொந்த வாழ்க்கையை சரி செய்ய தந்தை முயற்சி செய்துவருகிறார் எனக் கூறப்படுகிறது.