நான் ரெடி தான் வரவா...! தங்கலானுடன் நேருக்கு நேர் மோதும் அந்தகன்... குடும்பத்துக்குள்ளேயே போட்டியா...?

by ramya suresh |
நான் ரெடி தான் வரவா...! தங்கலானுடன் நேருக்கு நேர் மோதும் அந்தகன்... குடும்பத்துக்குள்ளேயே போட்டியா...?
X

பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் சாக்லேட் பாயாக இருந்தவர் பிரசாந்த். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. பிறகு சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கின்றார். இவர் நடிப்பில் உருவான அந்தகன் திரைப்படம் கடந்த ஐந்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஒரு வழியாக அதற்கு விடிவு காலம் வந்துவிட்டது.

அந்த வகையில் இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த அந்தாதூன் என்ற படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாக்கி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தை பிரசாந்தின் தந்தையும் இயக்குனருமான தியாகராஜன் இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படத்தில் பிரசாந்த் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தில் பிரசாந்த் உடன் சேர்ந்து பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கேஸ் ரவிக்குமார், வனிதா விஜயகுமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும் சந்தோஷ நாராயணன் இசை அமைத்திருக்கின்றார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு இருந்தார்கள்.

படத்தின் போஸ்டர் உடன் நடிகர் பிரசாந்த் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது 'படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியாக இருக்கின்றது' என அறிவித்திருக்கின்றார். ஏற்கனவே பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் மோத இருக்கின்றது. இரண்டு திரைப்படங்களின் கதையும் மிக அழுத்தமாக இருப்பதால் இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தங்கலான் திரைப்படம் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் படக்குழுவினர் இப்படத்தின் தேதியை தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் அந்தகன் திரைப்படமும் அதே தினம் ரிலீசாக இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் பிரசாந்த் மற்றும் விக்ரம் இருவருமே நெருங்கிய குடும்ப உறவினர்கள். இப்படி இருக்கையில் இவர்களின் படங்கள் நேருக்கு நேர் மோத இருப்பதால் குடும்பத்துக்குள்ளையே போட்டியா? என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Next Story